2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொன்சேகாவின் வழக்கில் புதிய தேர்தல் ஆணையாளர் பிரதிவாதி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

நாடாளுமன்ற உறுப்பினருக்கான சகல உரிமைகளுடனும் நாடாளுமன்றத்தில் அமரவும் வாக்களிக்கவும் தன்னை அனுமதிக்கக் கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக தற்போதைய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சேர்க்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

இந்த மனுவில் வழக்காளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது மனு மீதான தீர்ப்பு வரும் வரை 7ஆவது பிரதிவாதியை கொழும்பு மாவட்டத்திலிருந்து  முறையாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் செயலாற்றுகையை நிறுத்தி வைக்குமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.

மனு மீதான அடுத்த விசாரணை நவம்பர் 25இல் நடைபெறுமென நீதிமன்ற குழாம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .