2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உழ்ஹியா கடமையை நிறைவேற்ற முடியுமா? வை.எம்.எம்.ஏ. பேரவை அச்சம்

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இறுதியான ஹஜ் காலத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றல் தொடர்பில் அசசம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம்களின் முதன்மை மிக்க தேசிய இளைஞர் இயக்கமாகிய அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய பொது  செயலாளர் பைஸல் ஜிப்ரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் பன்னெடுங்காலம் தொட்டு முஸ்லிம்கள் ஏனைய இனங்களோடு ஐக்கியமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், முஸ்லிம் சமூகம் இந்நாட்டின் சுதந்திரத்துக்கும், அபிவிருத்திக்கும் பல வழிகளில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது.

முஸ்லிம் சமூகம் தனது சமயக் கடமைகளை எவ்விதமான இடையூறுகள், தடைகள் இல்லாமல் சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு அவ்வப்போது நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள், அரசாங்கங்களிடமிருந்து பூரண பாதுகாப்பையும், அனுசரனையையும் பெற்று வருகின்றது.

இருந்தபோதிலும், சமீப காலமாக முஸ்லிம்களின் சமய கடமைகளை நிறைவேற்றும் விடயத்தில் இடம்பெற்று வருகின்ற சில தடைகள், இடையூறுகள் குறித்து அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை மிகுந்த கவலையடைகின்றது.

குறிப்பாக இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை நிறைவேற்றும் காலத்தில் முஸ்லிம்களின் சமய  கடமையாகிய குர்பானை நிறைவேற்றுவதில் பல தடைகளையும்இ அச்சுறுத்தல்களையும் அலைக்கழிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

அக்கடமையை சுதந்திரமாக நிறைவேற்றுவதற்கு  மக்கள் சேவையில் உள்ள சிலர் எதிர்காலத்தில் தடைகளை விதிக்கலாம் எனவும் ஐயுறுகின்றது. உலகளாவிய முஸ்லிம் உம்மாவுடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஏனைய சமயங்களை பின்பற்றும் மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தாத விதத்தில் மிகுந்த ஒழுக்கத்துடன் குர்பான் கடமையை கடந்த காலங்களில் நிறைவேற்றி வந்துள்ளார்கள்.

எனினும், அண்மை காலத்தில் வெளியிடப்பட்டுள்ள சிலரின் அறிக்கைகள் முஸ்லிம்கள் ஹஜ் காலத்தில் நிறைவேற்றுகின்ற குர்பானி போன்ற கடமைகளை இம்முறை நிறைவேற்றுவதை மிகவும் பாதிப்படைய செய்யலாமென கருதுகின்றனர்.

இது முஸ்லிம்கள் மத்தியில் விரும்பத்தகாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்நாட்டில் தற்போது நிலவுகின்ற சமாதான அமைதி வாழ்வுக்கும் குந்தகம் விளைந்திடுமோ என்ற அச்சம் மேலிட்டுள்ளது..

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்புஇ இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் தனது சமயக் கடமைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நிறைவேற்றுவதற்குரிய உத்தரவாதத்தை வழங்கியிருப்பதை இவ்விடத்தில் நாம் வலியறுத்த விரும்புகின்றோம்.

எனவே, எதிர்வரும் ஹஜ் காலத்திலும், இதற்கு பின்னரும் குர்பான் உட்பட ஹஜ் தொடர்பான கடமைகளை சுதந்திரமாக முஸ்லிம்கள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தவும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கும் இது விடயத்தில் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவன செய்ய வேண்டும் என அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0

  • sakeenaAraheem Tuesday, 04 October 2011 03:43 AM

    எதற்கு சார் இந்த பயம்! அன்றைக்கு சாலி அண்ணவும் மேர்வின் மாத்தயாவும் சமாதிக்கு முன்னாள் நின்று உறுதியளித்துள்ளார்கள் குர்பான் கொடுக்கலாம் என்று...

    Reply : 0       0

    sadath Tuesday, 04 October 2011 02:06 PM

    YMMA முயற்சி பாராட்ட வேண்டியது, raheem சமாதி, அண்ணன் என்ற வார்த்தை பதம் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? நீங்கள் வஹாபிய முஸ்லிமாக இருங்கள் பரவா இல்லை, உள்வீட்டு பிரச்சினை நடுத்தெருவுக்கு கொண்டுவர வேண்டாம்.

    Reply : 0       0

    mam.fowz Tuesday, 04 October 2011 03:38 PM

    கவலை வேண்டாம் எமது நியதுதான் குர்ஆன். இதனை எங்கும் கொடுக்கலாம். சோமாலியா பொஸ்னியா போன்ற வறியய நாடுகள் இருக்கு அந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பினால் அதுவோம் கூடும். இதற்கு போய் .
    யாரிடம் தலை குனிய வேண்டாம் ... மக்கள் குறையை அறியாதவன் தலைவன் இல்லை? அல்லாஹ் மிகப் பொரியவன்.

    Reply : 0       0

    muha Tuesday, 04 October 2011 05:41 PM

    பயப்பட வேண்டாம் ஒன்றும் நடக்காது என்று நம்புவோம்.

    Reply : 0       0

    rys111222 Tuesday, 04 October 2011 06:42 PM

    insah allah appadi onrum nadakthu, arasukku therum muslimgal yar enru,allah kareem.

    Reply : 0       0

    xlntgson Tuesday, 04 October 2011 07:24 PM

    sakeena, raheem எங்கும், கபுரடியில் மட்டுமல்ல நின்று வணங்குவது பிரார்த்தனை புரிவது எல்லாம் ஓரிறைவனுக்குத்தான், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று கூற இயலாது!

    Reply : 0       0

    siyam Tuesday, 04 October 2011 07:49 PM

    இது பெரிய பிரச்சின இல்ல. மாடு அதிகம் வளர்ப்பது அவங்கள்தான். எனவே இன்னும் இரண்டு வருடங்களில் நாடு முழுதும் மாடு தான் இருக்கும். பின்னர் மாடு விலை குறையும். எனவே எல்லாருக்கும் நல்லது.

    Reply : 0       0

    naseer ismaeel Tuesday, 04 October 2011 09:05 PM

    இஸ்லாம் மார்கத்தினுடைய கடைமைகளை நிறைவேற்றும் விடயத்தில் குருக்கிடுகின்ற, அதனை தடுக்கின்ற, தனி மணிதனோ, அல்லது ஓரு சமூகமோ, இம்மை மறுமையின், இரட்சகனாகிய அல்லாஹ்வின் பாரிய கோபத்திற்குள்ளாக்கப்பட்டார்கள் என்பதனை இஸ்லாமிய வரலாறு எடுத்துச் சொல்கின்றது என்றவிடயம் நம் மனதோடிரிக்க இவ்விடயத்தின் பேரில் முஸ்லிம்களாகிய நாம் நமது கவனத்தை முழுமையாக அந்த அல்லாஹ்வின் பால் திருப்பிடுவோம். வாருங்கள் சகோதர, சகோதரிகளே..........இறைவனின் உதவி மிகவும் சமீபத்தில் இருக்கின்றது .....................

    Reply : 0       0

    FAROOS Tuesday, 04 October 2011 09:23 PM

    குர்பான் மட்டுமல்ல முஸ்லிம்களுடைய மற்ற எல்லா காரியங்களும் எந்த குறைகளும் இல்லாமல் நிறைவர அரசை கேளுங்கள்
    "யாஹ் அல்லாஹ்! நீயே எங்கள் பேரரசன் எங்கள் சமூகத்தை பாதுகாப்பாயாக !
    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

    Reply : 0       0

    Ossan Salam - Doha Tuesday, 04 October 2011 10:37 PM

    வீணாக ஏன் எல்லோரும் இப்படி அலட்டிக் கொள்கின்றார்களோ புரிவதில்லை. ஏன் ஒரு முக்கிய இப்படி தடுமாறுகிறது எனப் புரியவில்லை. யாரும் மாடு வெட்டக் கூடாது, குர்பான் கொடுக்கக் கூடாது எனச் சொன்னார்களா? இப்போதும் எம்மவர்கள் தினசரி குர்பான் வேலை நடக்குது தானே? எதற்காக இப்படி பயம்? அப்படி பயப்படும் இயக்கங்களால் நமக்கு என்ன பிரயோசனம்? இப்படி பொது அறிக்கைவிட்டு மக்களை குழப்பாமல் அப்படி அரசாங்கம் ஏதும் அறிவித்தல் விடுத்தால் மாத்திரம் அரசுடன் நேரடியாக பேச வேண்டியது தானே! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்காதீர்.

    Reply : 0       0

    Mohamed Razeem Wednesday, 05 October 2011 01:00 AM

    அல்லாஹ் போதுமானவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .