2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

'மும்மொழிகளிலும் இயங்கும் பொலிஸ் படையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்'

Kogilavani   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஓலிந்தி ஜயசுந்தர)
பத்து வருட மும்மொழி தேசிய திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான பொதுமக்களின் ஆலோசனைகளில், இலங்கை பொலிஸ் மும்மொழியிலும் இயங்கும் ஆற்றலுள்ளதாக மாற்றப்பட வேண்டும் என்னும் கருத்து மேலோங்கியுள்ளதாக நேற்று ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

இயன்றளவு விரைவாக மும்மொழி பொலிஸ் முறைமையை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கேட்டுள்ளதாக மும்மொழி இலங்கைக்கான ஜனாதிபதி முன்னெடுப்புகளின் இணைப்பாளர் சுனிமல் பெர்ணான்டோ கூறினார்.

தமிழ் பகுதியில் தமிழ் பொலிஸ் சிங்கள பகுதியில் சிங்கள பொலிஸ் என காணப்படுவதை மக்கள் விரும்பவில்லை. பொலிஸார் மும்மொழிகளையும் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகின்றனர்  என அவர் கூறினார்.

இலங்கையில் மொழி கற்பிக்கும் முறைகளை மாற்றியமைக்க வேண்டுமெனவும் தற்போதைய முறைகள் பெரும் தோல்விக்கண்டுள்ளதாகவும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

பத்துவருட மும்மொழி தேசிய திட்டத்தில் சேர்பதற்கான ஆலோசனைகளை மக்கள் அனுப்பி வைக்க வேண்டுமென ஜனாதிபதி செயலகம் கேட்டுள்ளது. இத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நவம்பர் பிற்பகுதியில் ஆரம்பித்து வைப்பார். மக்கள் ஒக்டோபர் 12, 2011 இற்கு முன் தமது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

இது குறித்த விபரங்களை www.info.gov.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 06 October 2011 08:55 PM

    ஜனாதிபதி முதலில் தனது அரசிலுள்ள பேரினவாத அமைச்சர்களுக்கும், எம்.பி.களுக்கும் அதனை அமுலாக்க வேணும்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 06 October 2011 09:48 PM

    அரசியல் வாதியாக தகுதி ஏதும் இல்லை. மக்கள் யாரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களது தகைமைகளை நிர்ணயிக்கும் உரிமை பாராளுமன்றில்- அதாவது ஓர் அரசியல்வாதி அல்ல- கூட்டமாக கூடி முடிவு செய்ய இயலும். service commissions சேவை ஆணையங்கள் அதை பல ஜனநாயக நாடுகளில் முடிவு செய்கின்றன! இலங்கையில் அதை தகுதி ஆக்கினால் கட்டாயமாக அல்லாவிட்டாலும் கட்டம் கட்டமாக செய்யலாம். தமிழ் பிரதேசங்களில் சிங்களவரும் சிங்கள பிரதேசங்களில் தமிழரும் இலகுவாகப் பணியாற்ற வழி செய்யும்.

    Reply : 0       0

    meenavan Thursday, 06 October 2011 10:55 PM

    அரசியல் கட்சிகள் அபேட்சகர்களை தெரிவு செய்யும்போது மொழியறிவையும் நிபந்தனையாக வைக்கலாம். சாத்தியப்பாடு.....?

    Reply : 0       0

    nakkiran Saturday, 08 October 2011 09:28 AM

    வடக்கு கிழக்கு, மக்கள் ஆங்கிலமோ, சிங்களமோ தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழில்
    காரியம் ஆற்றவே விரும்புகின்றனர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .