2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யார் முதலில் சுட்டார் என்பதை கண்டறிவதில் அர்த்தமில்லை : அமைச்சர் டலஸ்

Super User   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டியென் சில்வா)

முல்லேரியாவில் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறுவதாகவும் விசாரணைகள் முடிவடையும்வரை இது குறித்து விபரங்களை வெளியிட முடியாது எனவும் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.  யார் முதலில் சுட்டார் என்பதை கண்டறிவதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆளுங்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர பலியானதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை தேர்தல் நடைபெற்ற 23 உள்ளூராட்சி  மன்றங்களில் 21 மன்றங்களை ஐ.ம.சு.கூட்டமைப்பு வென்றமை தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும
'பொலிஸாரும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களும் சீருடை அணிந்திருப்பதுடன் அடையாள ஆவணங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார். எனினும்
யார் முதலில் சுட்டார் என்பதை கண்டறிவதில் அர்த்தமில்லை. இது உண்மையில் எமக்கு ஒரு பேரழிவாகும். இச்சம்பவம்  ஐ.ம.சு.கூட்டமைப்பு விழித்தெழுவதற்கான மணியாகும்" எனவும் அவர் கூறினார்.

இந்நபர்களின் ஒழுங்கீன நடத்தைகள் குறித்து தேர்தலுக்கு முன்பாக தகவல் கிடைத்தவுடன் ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என செய்தியளார்கள் கேட்டபோது, அப்படிச செய்திருந்தால் அது  கட்சியின் பிரசார நடவடிக்கைகளை பாதித்திருக்கும் எனக் கூறினார்.

'கடந்த காலத்திலும் தேர்தல் முடிந்தவுடன்தான் நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். தேர்தலுக்கு முன்பாக நடவடிக்கை மேற்கொண்டால் அது எமது வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்கு நியாயமற்ற பாதிப்பை ஏற்படுத்துவதுடன்  பாதிக்கும்' என அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். (Pix by : Waruna Wanniarachchi)


You May Also Like

  Comments - 0

  • Nishanthan Tuesday, 11 October 2011 03:54 AM

    என்ன வியாக்கியானம்டப்பா இது?

    Reply : 0       0

    meenavan Tuesday, 11 October 2011 04:13 AM

    துமிந்த சில்வா ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் வரை விபரங்களை வெளியிட முடியாது தானே?

    Reply : 0       0

    vaasahan Tuesday, 11 October 2011 03:36 PM

    நல்ல நியாயப்படுத்துதல். வாழ்க புத்திசாலிகள்.

    Reply : 0       0

    Srilankamujahedin Tuesday, 11 October 2011 03:58 PM

    Government knows about the entire problem but they kept silent because they want to win election @ last they lost one… Government should be Responsible the incident.

    Reply : 0       0

    unmai Tuesday, 11 October 2011 04:23 PM

    100 பேரை சுட்டு இருந்தாலும் கூட தேர்தல் முடிந்தவுடன்தான் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ?

    Reply : 0       0

    meaw Tuesday, 11 October 2011 08:50 PM

    ha ha ha ..............

    Reply : 0       0

    kaandee Tuesday, 11 October 2011 11:45 PM

    உங்களுக்குள் அடிபட்டு சாகிறீர்கள் .......அதனால் எங்களுக்கென்ன...இதை இப்படியே விட்டுவிடுங்கள் ....... ஒரு அப்பாவி இறந்தால் அதை பற்றி கவலைப்பட நியாயம் இருக்கிறது ......!

    Reply : 0       0

    xlntgson Wednesday, 12 October 2011 10:12 PM

    வன்முறை அரசியலின் உச்சக்கட்டம், பக்க சார்பு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .