2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆழ்கடல் மீன்பிடி ஆலோசனை யதார்த்தத்துக்கு பொருந்தாது: சுரேஷ் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

வடபகுதிக் கடலில் மீனவரிடையிலான மோதலை தவிர்க்க இலங்கை, இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டுமென கூறப்படும் ஆலோசனை யதார்த்தத்துக்கு பொருந்தாதென  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒடுங்கிய கடல் பரப்பில் மட்டும் மீன்பிடியில் ஈடுபடாமல் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட இரு நாட்டு மீனவர்களுக்கும் உதவ வேண்டுமென  இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிநாட்டு செயலாளர் ரஞ்சன் மத்தாய் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து  கேட்டபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

இது நல்ல ஆலோசனைதான். ஆனால் யாழ்ப்பாண மீனவர்களிடம் ரோலரோ அல்லது அதற்கான வேறு வசதிகளோ இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்நாட்டு மீனவர்களிடம் இந்த வசதிகள் உள்ளதென எனக்குத் தெரியும். ஆனால் யாழ்ப்பாண மீனவர்களிடம் இந்த வசதிகள் இல்லை. இந்த வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த ஆலோசனை நடைமுறைச் சாத்தியமானதாகுமெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ் நாட்டு மீனவர்கள் கடல் எல்லைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பான முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கூறினார். ரஞ்சன் மத்தாய் யாழ்ப்பாணம் சென்றபோது அரசாங்க அதிபர் இந்த பிரச்சினையை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 12 October 2011 11:42 PM

    அரசுடன் பேசி, யாழ் மீனவர்களுக்கு ரோலர் (trawler) வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் என்ன? யாழ் மீனவர்கள் நன்மை பெறுவதுடன் நாட்டின் மீன் தேவையின் ஒரு பகுதி ஈடு செய்யப்படும் அல்லவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .