2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பணிப்பெண்களுக்கு உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்: அமைச்சர்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

மத்திய கிழக்கில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கைப் பணிப்பெண்களுக்கு உதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  தெரிவித்தார்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நடைமுறை சிக்கல்கள் காரணமாக நாம் எதிர்பார்த்தளவு விரைவாக பலருக்கு உதவிகளை வழங்க முடியாமல் போயிருக்கலாம் என அமைச்சர் கூறினார்.

எனினும், சம்பள நிலுவைகள் என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் சில அதிகாரிகள் பணிப்பெண்களுடன் மூர்க்கமாக நடந்துகொள்கின்றனர் எனவும் அவர்களுக்கு பொதுமக்கள் உறவு தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன குற்றம் சுமத்தினர்.

இக்குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில், வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை கையாள்வதற்காக இலங்கைத் தூதரகங்களில் விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X