2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் - இலங்கை நட்புறவுக்காக சைக்கிள் பயணம்

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி, யூ.கார்த்திக்)

'பங்களாதேஷ் - இலங்கைக்கான நட்புறவு பயணம்' எனும்  தொனிப்பொருளில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கான சைக்கள் பயணம் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பிலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த சைக்கிள் பயணத்தில் கெவ்கிராடொங் எனும் பங்களாதேஷ் குழுவின் ஐந்து உறுப்பினர்கள் பங்குபற்றுகின்றனர்.

காலி, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளடங்களாக நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளதாக இக்குழுவின் ஏற்பாட்டாளரான முன்தாசிர் மஹ்மூன் தெரிவித்தார்.

சைக்கிள் பயணம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'இந்த பயணத்தின் மூலம் இரு நாட்டுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும்

இந்த சைக்கிள் பயணத்தின் மூலம் 1,500 கிலோமீற்றரை சுமார் 17 நாட்களினுள் கடக்கவுள்ளோம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 – 10 மணித்தியாலம் பயணிக்கவுள்ளோம்.

இது போன்ற சைக்கிள் பயணங்களை சில நாடுகளில் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம்' என்றார். Pix By:Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X