2024 மார்ச் 28, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்கள் அச்சிடுகின்ற சம்பவங்கள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது அதிகரித்து வருவதாகவும் கடந்த ஒன்பது மாதங்களில் இது தொடர்பான 62 சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில்  38 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

2004ஆம் ஆண்டு 43 சம்பவங்களும் 2005ஆம் ஆண்டு 35 சம்பவங்களும் 2006ஆம் ஆண்டு 28 சம்பவங்களும் 2007ஆம் ஆண்டு 37 சம்பவங்களும் 2008ஆம் ஆண்டு 34 சம்பவங்களும் 2009ஆம் ஆண்டு 52 சம்பவங்களும் கிடைத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்டபோது, தற்போதைய நாணயத்தாள்களில் அதிநவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போலி நாணயத்தாள்களை தயாரிப்பது கடினமெனவும் கூறினார்.

'அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் போலி நாணயத்தாள்களை இலகுவாக கண்டறிய முடியும். எவராவது போலி நாணயத்தாள்களை அச்சடிப்பதற்கு முயன்றால் அவர்களை இலகுவாக பிடிக்கமுடியும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதன் காரணமாக புதிய சட்டங்கள் உட்புகுத்தப்பட வேண்டிய அவசியமில்லையெனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
(Kelum Bandara)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X