2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள்களால் அதிக விபத்துகள்

Super User   / 2011 நவம்பர் 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

இலங்கையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் ஏற்படுவதாகவும் இவ்வருடம் உயிரிழப்புகள் இடம்பெற்ற 1217 விபத்துச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

'இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை 20713 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 1217 சம்பவங்களில் உயிரிழப்புகள் இடம்பெற்றன. 3469 சம்பவங்களில் படுகாயங்கள் ஏற்பட்ட' என போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தினமும் சராசரியாக 114 வீதி விபத்துகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். மோட்டார் சைக்கிளோட்டிகள் வாகன நெரிசலை மீறிச்செல்வதற்காக நடைபாதைகளுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்துவதால் விபத்துகளில் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் பாதசாரிகளாக இருப்பதாகவும் அவர்கூறினார். குறித்த காலப்பகுதியில் இவ்வாறான விபத்துகளினால் 375 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

பிரதியமைச்சர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற உயிர்காப்பாளர்கள் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • ullooran Tuesday, 15 November 2011 09:59 PM

    இப்படிச் சொல்லி மோட்டார் சைக்கிளுக்கும் வரி அறவிடப் போறார்கள் போல ...! எதைத்தான் விட்டு வைக்கப் போறீங்க யா...!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .