2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரிஸானா நபீக்கை சந்தித்த பெற்றோர்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கும் அவரது பெற்றோரும்  உணர்ச்சி வசப்பட்ட சூழ்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தித்துக்கொண்டனர். 

தனது எஜமானாரின் குழந்தையை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டில் ரிஸானா நபீக்கிற்கு கடந்த 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

சவூதி அரேபியாவிற்குச் சென்றுள்ள ரிஸானா நபீக்கின் பெற்றோர், சிறைச்சாலையிலுள்ள தமது மகள் ரிஸானா நபீக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.  இதன்போது 'என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறி ரிஸானா நபீக் அழுதார்.

'எல்லாம் வல்ல அல்லா எங்களது மகளை மீண்டும் கிடைக்க உதவ வேண்டும்' என ரிஸானா நபீக்கின் தாயார் கூறினார். இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான காலம் கூடிய விரைவில் வருமென ரிஸானா நபீக்கின் தாயார் தனது மகளுக்கு கூறினார்.

சவூதி அரேபியாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றி வருகின்ற வைத்தியரும் சமூக சேவையாளருமான கிபாயா இப்திகார் என்பவருடனையே  பெற்றோர் ரிஸானா நபீக்கை சென்று பார்வையிட்டனர்.

'இதுவொரு சிக்கலான விடயம்' என இலங்கை அதிகாரிகள் விமர்சித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்தால் மாத்திரமே ரிஸானா நபீக்கை காப்பாற்ற முடியுமென சவூதி அரேபியாவிலுள்ள சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை வேலைவாய்ப்பு முகவரகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலாளர் இப்ராஹிம் சஹிப் அன்சார், நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷெரீப் முகமட் தௌபீக் ஆகியோர் சவூதி அரேபியாவுக்குச் சென்றனர்.  மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை சவூதி அரேபியாவைச் சென்றடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஸானா நபீக்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு  உயிரிழந்த குழந்தையின் பெற்றோரையும் அந்த நாட்டுத் தலைவரையும் மேற்படி குழுவினர் கோரவுள்ளனர். (Arab News)


You May Also Like

  Comments - 0

  • raja selliha Wednesday, 16 November 2011 05:48 PM

    முதலில் அரபு நாட்டுக்கு velaikku போவதை நிறுத்துங்கள் ..............

    Reply : 0       0

    nawas Wednesday, 16 November 2011 09:35 PM

    இலங்கை அரசாங்கத்துக்கும் முஸ்லிம்கள் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.

    Reply : 0       0

    kalmunaiyaan Wednesday, 16 November 2011 11:55 PM

    மன்னிப்பு ஏனும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த மிகப் பெரிய மனிதாபிமான செயல் மூலம் இந்த புத்தி புரியாத ஏழைச் சிறுமியினை தவறிலிருந்து மன்னிப்பளிக்க, பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனதினில் அல்லாஹுத்தாலா அந்த உதிப்பினை கொடுக்க நாம் ஏல்லோரும் பிரார்த்திப்போம்....இதற்காக முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் கிபாயா, நலன்விரும்பிகள் அனைவருக்கும் அல்லாஹுத்தாலா ரஹ்மத் செய்வானாக...

    Reply : 0       0

    easternguy Thursday, 17 November 2011 02:00 AM

    றிசானவுக்கு மன்னிப்பு கிடைக்கும் என பிரார்த்திப்போம்....... அது சரி
    raja selliha , அரபு நாட்டுக்கு வேலைக்கு போவதை நிறுத்தினா, நீங்க வந்து சோறு கொடுப்பீங்களா ? வாழ்கையின் யதார்த்தத்தை முதல் விளங்கிக் கொண்டு எழுதுங்கள் சார்.....

    Reply : 0       0

    miqdad Thursday, 17 November 2011 05:38 AM

    இறைவன் அரேபியர்களிடமிருந்து இஸ்லாத்தை பாதுகாப்பானாக.

    Reply : 0       0

    Adil Thursday, 17 November 2011 05:59 AM

    easternguy.. அவர்களே ராஜா சொல்வதில் என்ன பிழை இருக்கின்றது? முஸ்லிம் பெண்கள் வெளிநாட்டிற்கு செல்வது 100% முஸ்லிம் இளைஞர்களே காரணம். இஸ்லாத்தில் இல்லாத கேவலம் கெட்ட சீதனக் கொடுமையே. முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தில் கூறப்பட்டதுபோல் திருமண வாழ்கையை அமைத்துக் கொண்டார்களேனால் இந்த நிலைமை ஏற்படாது.

    மேலும் வளைகுடா நாடுகளில் கஷ்டத்தினால் வேலையிடங்ககளில் இருந்து நிர்க்கதியான நமது முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் வேறுவழியின்றி ஒன்றாக தங்கி இருப்பதை நான் எனது இரு கண்களினால் கண்டிருக்கின்றேன்.

    யா அல்லாஹ் நமது பெண்களை காப்பாற்றுவாயாக யாஅல்லாஹ் இந்த நாட்டில் சீதனக் கொடுமையை இல்லாமல் செய்!

    Reply : 0       0

    Akkaraipattu Thursday, 17 November 2011 07:47 AM

    வாழ்க்கையில் விடை தெரியாத சில யதார்த்தங்களில் இதுவும் ஒன்று......
    வறுமை , தொழில் வசதியின்மை....... இதனால் தான் மனித பண்பு தெரியாத சில அரபிகளிடம் சிக்க வேண்டியிருக்கிறது.........

    Reply : 0       0

    M.B.M.Nazeem Thursday, 17 November 2011 08:43 AM

    Islam doesn't stop women working, but they have specified works to do. Saudi Parents in Rizana's matter they think they are the pure Muslim. How come that?

    Reply : 0       0

    Abdul Hakeem Thursday, 17 November 2011 09:50 AM

    "இறைவன் தற்கால அரேபியர்களிடமிந்து இஸ்லாத்தை காப்பானாக " என்று வந்தால் சரியாக இருக்கும் Mr.Miqdad

    Reply : 0       0

    chelvin Thursday, 17 November 2011 11:49 AM

    பாதிக்கப்பட்ட அரபு பெற்றோரின் மனம் இளகினால் ரிசானாவுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    Reply : 0       0

    rifaydeen jamaldeen Thursday, 17 November 2011 08:42 PM

    ரிசானாவுக்கு இரு கரம் ஏந்தி துவா கேட்போம். ஆமீன்!

    Reply : 0       0

    rifaydeen jamaldeen Thursday, 17 November 2011 08:44 PM

    ரிசானாவுக்கு இரு கரம் ஏந்தி துவா கேட்போம் ஆமீன்!

    Reply : 0       0

    mn siyan Friday, 18 November 2011 03:59 AM

    allah risana enum antha thankaiku uthavi saivayaha! aameen.

    Reply : 0       0

    rifaydeen jamaldeen Friday, 18 November 2011 06:39 AM

    ரிசானாவுக்கு இரு கரம் ஏந்தி துவா கேட்போம் ஆமீன்!

    Reply : 0       0

    Mohamed Razeem Monday, 21 November 2011 11:32 PM

    ரிசானவுக்காக அல்லாஹ் விடம் மன்றாடி துஆ கேட்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .