2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு கிடைக்கும் என இலங்கை தூதுக்குழுவினர் நம்பிக்கை

Super User   / 2011 நவம்பர் 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் இலங்கை உயர் மட்டத் தூதுக் குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயம் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக் விடயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என அராப்  நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மே மாதம் 4 மாத குழந்தையொன்றை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ரிஸானா நபீக்கின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள குழுவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிசங்க என் விஜேரட்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் இப்பராஹிம் சாஹிப் அன்ஸார், நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம். அஸ்வர், எம்.எஸ்.எம். தௌபீக் ஜம்மியதுல் உலமாவின் பிரதி செயலாளர் நாயகம் எம்.எஸ்.எம். தாஸிம், இம்ரான் ஜமால்டீன், எம்.பி.எம். ஸருக் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்ந்த சமூகத் தலைவர்களை சந்தித்து ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்கும்படி கோரியுள்ளனர்.

இறந்த குழந்தையின் பாட்டனரான மிர்ஹாத் பஹாத் அல் ஒடாய்பியையும் இவர்கள் சந்தித்து பேசினர்.

குற்றவாளியாக காணப்பட்ட இப்பணிப்பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியும் என்ற தீவிர நம்பிக்கையுடன் நாம் இந்த மண்ணிலிருந்து செல்கிறோம் என சவூதியிலிருந்து  புறப்படுவதற்குமுன் அராப் நியூஸ் பத்திரிகைககு தாஸிம் தெரிவித்துள்ளார்.

தவாத்மி நகரிலுள்ள பைனான் என்பவர் தலைமையிலான ஒடாய்பி குடும்பத்தினர் தமக்கு பெரும் வரவேற்பு அளித்ததாகவும் இஸ்லாமிய சட்டத்தின்கீழ் இப்பணிப்பெண்ணை விடுதலை செய்வதற்கு தன்னாலான அனைத்தையும் செய்வதாக அவர் கூறியதாகவும் தாஸிம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஒடாய்பி குடும்பத்தினரிக்கும் இடையிலான உறவில் இந்த விஜயம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் எனவும் இது மகிழ்ச்சியான முடிவுக்கு வழிவகுக்கும் எனவும் ஜமால்டீன் கூறினார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஆளுநர் அலவி மௌலனான கூறினார். அனுதாப அடிப்படையில் குறித்த குழந்தையின் பெற்றோர் ரிஸானாவுக்கு மன்னிப்பளிப்பர் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Saturday, 19 November 2011 09:15 PM

    அல்ஹம்துலில்லாஹ் பாவப்பட்ட அப்பெண்ணுக்கு மன்னிப்புக் கிடைக்கட்டும். நாமும் துஆ செய்வோம்.

    Reply : 0       0

    Thariq Niyas Saturday, 19 November 2011 09:17 PM

    அனைவரும் எமது சகோதரியின் விடுதலைக்காய் பிரார்த்திப்போமாக..................

    Reply : 0       0

    fazal Saturday, 19 November 2011 10:10 PM

    இதன் பிறகாவது பெண்களை, குறிப்பாக பருவம் அடையா பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பாதீங்க ஐயா.

    Reply : 0       0

    Ossan Salam - Doha Saturday, 19 November 2011 10:42 PM

    நாம் சகலரும், அதாவது இலங்கையின் சகல தரத்தையும் சேர்ந்தவர்கள் பலரும் அவரவர் சக்திக்கேற்ப இந்த இளம் பெண்ணை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளையும் கூடுதலாகவும் குறைவாகவும் மேற்கொண்டனர். இது குறித்து அரசும் ஏனைய கட்சிகள் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பாரும் அயரா முயற்சி செய்தனர். இனி வல்லவன் அல்லாஹ்வின் ஏட்டில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதுவே நடக்கும் எனினும் இறுதி வரை இந்த ஏழை இளம் பெண்ணுக்காக நாம் பிரார்த்திப்போம்.தவறான வழி நடத்தலின் மூலம் வெளிநாடு வந்த இது போன்ற அபலைகளுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்!!

    Reply : 0       0

    ali Sunday, 20 November 2011 12:40 AM

    எந்த பெண்ணையும் அனுப்பாதீர்கள்.

    Reply : 0       0

    Kethis Sunday, 20 November 2011 01:49 AM

    இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவது வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைதான். பல குடும்பங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் வளம் பெற்றுள்ளன. ஆனால் எதையும் முறைப்படி விதிகளின்படி செய்வது நன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X