2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புலிகளை தோற்கடிக்கலாம் என கோட்டாபய மாத்திரமே நம்பிக்கை கொண்டிருந்தார்: சொல்ஹய்ம்

Super User   / 2011 நவம்பர் 20 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என நம்பிக்கை கொண்டிருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியதாக நோர்வேயின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'2008 ஆம் ஆண்டுவரை இந்திய புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு அதிகாரியும் எல்.ரி.ரி.ஈ.யை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் எம்.கே. நாராயணன் மற்றும் ஏனைய அதிகாரிகள் தமது ஆரம்ப கருத்துகளுக்கு முரணாக, தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, எல்.ரி.ரி.யை இலங்கைப் பாதுகாப்பு படைகள் தோற்கடிக்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்' என சொல்ஹெய் கூறியதாக நோர்வேயினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காகூட எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்படுவது தொடர்பாக எதிர்மறையான கருத்தை கொண்டிருந்ததாக எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

 

 

1997 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணையாளராக நோர்வே செயற்பட்டமை தொடர்பாக நோர்வே அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறிப்பிடப்பட்டுள்ளது.

 


 


You May Also Like

  Comments - 0

  • tamilan Sunday, 20 November 2011 08:32 PM

    wel done Gottabe ..................

    Reply : 0       0

    meenavan Monday, 21 November 2011 12:39 AM

    அப்படியென்றால் உண்மையான இராணுவ போர் வெற்றி வியுக சிற்பி கோதாதானோ? முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா வெறும் இறப்பர் முத்திரையா?

    Reply : 0       0

    ஓட்டமாவடி ஜெமீல் Monday, 21 November 2011 01:10 AM

    தான் சார்ந்த சமூகத்தையும் அந்த சமூகத்திற்குள் வாழும் இன்னொரு சமூகத்தையும் நிம்மதியாக வாழ விடாமல், அப்பாவிகளை சந்தேகத்தில் கொண்றுகுவிக்கும் எந்த போராட்டத்திற்கும் இதே கதிதான் ஏற்படும்.

    Reply : 0       0

    thivaan Monday, 21 November 2011 07:05 AM

    சொல்கைம் ஒரு கோமாளி , அவர் எந்த திறனும் அற்றவர்.

    Reply : 0       0

    BAANU Monday, 21 November 2011 01:53 PM

    அப்போ இவர்தான் தளபதியோ ? என்ன பகிடியோ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .