2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்காவில் பாலியல் வீடியோ கடையில் இலங்கை ஊழியர் கொலை

Super User   / 2011 நவம்பர் 20 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவில் பாலியல் வீடியோ கடையொன்றில் இரவுநேர கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையரான ஊழியர் ஒருவர் மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலில் பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித:துள்ளனர்.

புரூக்ளின் நகரின் சன்செட் பார்க் 3 ஆவது ஒழுங்ககையில்2 24 மணித்தியாலமும் இயங்கும் வீடியோ எக்ஸைட்மென்ட் எனும் கடையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து கொலையாளி உடனடியாக தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலிகிதகராக பணியாற்றிய மேற்படி ஊழியரை தாக்கிய பின்னர், வீடியோ அடுக்களிலிருந்து வீடியோக்களை பையொன்றுக்குள் நிரப்பிக்கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் கூறினார்.

இச்சந்தேக நபர் பணப்பதிவு இயந்திரத்தையும் திறக்க முயன்றுள்ளர். ஆனால் அதில் அவர் வெற்றிபெறவில்லை.
54 வயதான நிமல ரந்துனு என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். இவர் இக்கடையில் 3 வருடங்களாக கிளார்க்காக பணியாற்றியதாக  கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

கடையின் உரிமையாளரும் இலங்கையிலிருந்து வந்தராவார். ஆனால் அவர் தனது முழுப்பெயரை வெளியிடவில்லை என நியூயோர் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தான் 20 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் புரூக்களின் உட்பட பல இடங்களில் வயதுவந்தோருக்கான பொழுதுபோக்கு வியாபார நிலையங்களை நடத்துவதாகவும் மேற்படி உரிமையாளர்  கூறியுள்ளார்.  

'நான் ரந்துனுவின் மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்காக இலங்கைக்குச் செல்லவுள்ளேன். கடவுளே அவர்களுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன் என்பது தெரியவில்லை' என அவர் கூறியுள்ளர்.

அக்கடையை தனது சகோதரருடன் இணைந்து நடத்தும் இணை உரிமையாளரான ஜானக டி அல்விஸ் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் தான் 3 வருடங்களுக்கு முன்னர் கொள்ளையர்களினால் மடக்கப்பட்டதாகவும் ஆனால் அக்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Kethis Sunday, 20 November 2011 08:13 PM

    ம்ம்ம். வெளிநாட்டு வாழ்க்கை.. எப்படியெல்லாம் பொழைக்க வேண்டியிருக்கு?

    Reply : 0       0

    fazal Sunday, 20 November 2011 08:37 PM

    அங்க போய் இந்த தொழில் ...

    Reply : 0       0

    JABEER Sunday, 20 November 2011 09:24 PM

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    Reply : 0       0

    manithan Sunday, 20 November 2011 10:15 PM

    அமெரிக்கா, ஐரோப்பா என்று போகும் பலர் இப்படித்தான் பிழைக்கின்றனர். கௌரவமான(?) குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் சாராயத் தவறணையில் வேலை பார்த்த சம்பவம் எனக்குத் தெரியும். பணத்துக்காக எதையெல்லாமோ விற்கிறார்கள். பின்னர், இங்கு வந்து போலியாக நடிக்கிறார்கள்.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 21 November 2011 03:30 AM

    இங்கு இருப்பவர்கள் என்ன பெரிய ராஜா வேலையா பார்க்கிறார்கள். எல்லாம் ஒன்றுதான் அதனை விட கேவலம் இங்கு நடக்குது. பாவம் அவன் ....

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Monday, 21 November 2011 03:50 AM

    ஆமா இங்கு ஸ்ரீலங்கா ஆளுங்க சிலர் பொம்பிளையையே கூட்டி கொடுக்கிறாங்கோ.

    Reply : 0       0

    Rajiswaran Monday, 21 November 2011 04:04 AM

    இலங்கையில் மதுபானக்கடை செக்ஸ்வீடியோ விற்கும் கடை எதுவும் இல்லையா?

    Reply : 0       0

    fazal Monday, 21 November 2011 05:55 AM

    வக்காலத்து ???

    Reply : 0       0

    pasha Monday, 21 November 2011 03:05 PM

    நாய் விற்கும் காசு குறைக்காது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

    Reply : 0       0

    ummpa Monday, 21 November 2011 06:56 PM

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் . யாரும் அவர்களின் குடிஉரிமை பெற்றுக்கொண்டால் உரிய வேலைக்கு ட்ரை பண்ணமுடியும் ஆனால் இதுவும்கூட மிகவும் கேள்விக்குறிதான். இருந்தாலும் காலத்தை கடத்திக்கொண்டு பாஸ்போர்ட் பெற்று காலுன்றதான். மற்றும் மாணவர்கள் மேலதிக செலவுகளுக்கு இப்படியான வேலைகளை செய்துகொள்ள தயங்குவதில்லை .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .