2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரிசானா முஸ்லிம் என்பது அவர் பணியாற்றிய பிரதேச மக்களுக்கு தெரியாது'

Super User   / 2011 நவம்பர் 20 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட குழந்தையின் பெற்றோர் வாழும் தவாத்மி பிரதேச மக்களுக்கு ரிசானா நபீக் முஸ்லிம் என தெரியாது என அண்மையில் சவூதி அரேபியபாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.  
இது தொடர்பில் குறித்த பிரதேச முக்கியஸ்தர்களை சந்தித்து விளக்கியதாக குறிப்பிட்ட அவர், இதனையடுத்து குறித்த பகுதி முக்கயஸ்தர்கள் ரிசானாவின் விடுதலைக்காக முயற்சிப்பதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த குழந்தையின் பெற்றோரை பணிப்பெண் ரிசானாவின் பெற்றோர் அடுத்த வாரங்களில் சந்தித்து மன்னிப்பு வழங்கும் படி கோரவுள்ளனர். இதற்காக வேண்டி ரிசானாவின் பெற்றோர் தற்போது சவூதி அரேபியாவில் தங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பணிப்பெண் ரிசானாவின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கம், சவூதி அரேபிய அரசாங்கம் மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் அதிக அக்கறை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மிக விரைவில் பணிப்பெண் ரிசானா விடுதலை செய்யப்படுவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பணிப்பெண் ரிசானாவின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஏ.எச்.எம்.அஸ்வர், வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.அன்சார், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி அமைச்சின் செயலாளர் நிசங்க விஜயவர்தன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க மற்றும் அகில இலங்கை ஜம்யியதுல் உலமா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Monday, 21 November 2011 03:00 PM

    மாற்று மத பெண்களை முஸ்லிம் பெயர் சூட்டி சவூதி அனுப்புவது இலங்கை ஏஜெண்டுகளின் தொழில்

    Reply : 0       0

    hassanqs Monday, 21 November 2011 07:01 PM

    thanks god

    Reply : 0       0

    sameem Monday, 21 November 2011 09:06 PM

    அவர்கள் கட்டாயம் மன்னிக்க வேண்டும்
    அதுதான் ஒரு நல்லவர்களின் பண்பு .

    Reply : 0       0

    ziyad Tuesday, 22 November 2011 12:22 AM

    பண்பை பற்றி சவுதி அரேபியர்களுக்கு என்ன தெரியும்?

    Reply : 0       0

    chelvin Tuesday, 22 November 2011 11:49 AM

    நம்ம தூழுக்குளுவுக்கு ஏதாவது மார்க்கம் தெரியுமா என்றுதான் அறிய வேண்டும் .

    Reply : 0       0

    ummpa Tuesday, 22 November 2011 03:14 PM

    சட்டம் ஒன்றுதான் அதற்காக அவர் முஸ்லிம் என்று தெரியாது என்ற இது தெரிந்தால் விட்டுவிடுவார்களோ. ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் ஓன்று இருக்கும்போது சட்டம் அதன் தீர்ப்பை கூறிவிட்டது. எனவே இழந்த குடும்பத்திடம் கெஞ்சி கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் என்ன மனித நேயம் இல்லாதவர்களா !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .