2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொன்சேகாவின் ஆதரவாளருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

சிறை அதிகாரிகளை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக  குற்றம் சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளரான அங்கவீனமான முன்னாள் இராணுவ கப்டன் ஒருவருக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கப்டன் கயான் பிரசாத் குமார விதானகே எனும் இந்நபர், கடந்த ஜுலை 21 ஆம் திகதி பொன்சேகா தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சிறை அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தடுத்தாக கொழும்பு குற்றவியல் பிரிவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் ஆஜரான மேற்படி இராணுவ கப்படன் தான் நிரபராதி எனத் தெரிவித்தார்.

இவ்வழக்கு விசாரணையை மார்ச் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் 3 சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்தார்.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .