2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனுராதபுரம் சிறைக் கைதிகளை ஜே.வி.பி. பார்வையிட அனுமதிக்கப்படவில்லை: உதுல்

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பார்வையிடச் செல்வதற்கு ஜே.வி.பியின் மாற்றுக்குழு உறுப்பினர்கள் நேற்று முயற்சித்தபோது அதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவின் உறுப்பினரும் அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான உதுல் பிரேமரட்ன இது குறித்து கூறுகையில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டபோது சக கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் அநுராதரபும் சிறைச்சாலைக்குச் செல்வதற்கு தாம் முயற்சித்தாக கூறினர்.

எனினும் சிரேஷ்ட சிறை அதிகாரி ஒருவர் தமது குழுவினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவம் அவர் தெரிவித்தார்.
'இக்கைதிகள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முற்றபட்டிருப்பார்கள் என்று கூறப்படுவi நாம் நம்பவில்லை. ஏனைய சிறைச்சாலைகளிலும் எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் உள்ளனர்.அங்கு இவ்வாறு நடைபெறவில்லை' எனவும் உதுல் பிரேமரட்ன கூறினார்.

இச்சம்பவம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .