2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமெரிக்க - இலங்கை பிரச்சினைகள் உதவித்திட்டங்களை பாதிக்காது: யூ.எஸ்.எயிட்

Kogilavani   / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியென் சில்வா)
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினை, இலங்கைக்கான அமெரிக்க உதவிமீது தாக்கம் செலுத்தாது என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் கூறியுள்ளது.

யூ.எஸ்.எயிட்டின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டபோது யூ.எஸ்.எயிட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் பெட்னரிடம் யூ.எஸ்.எயிட் உதவிகளை ஒதுக்கும்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டனவா என வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும்போது 'அப்படி ஏதும் இல்லை, நாம் நல்லிணக்கம் புனருத்தாரணம் பற்றி அக்கறையாக உள்ளோம்' என அவர் கூறினார்.

அண்மையில் கொண்டுவரப்பட்ட, கம்பனிகளை சுவீகரிக்கும் சட்டம் தொடர்பில் கேட்டபோது 'எதிர்காலம்பற்றி ஊகிப்பதை நான் விரும்பவில்லை. அமெரிக்க முதலீட்டின் மீது இந்த சட்டத்தில் தாக்கம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .