2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உள்ளூராட்சிமன்ற விசேட ஏற்பாடு, தேர்தல் முறை திருத்த சட்டமூலங்கள் நிறைவேற்றம்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்காக புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்யும் இரண்டு சட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஊள்ளூராட்சிமன்றங்கள் (விசேட ஏற்பாடு) சட்ட மூலம், உள்ளூராட்சிமன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலம் என்பவை இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

சுப்றப்பானதாக காணப்படுமாயின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் இம்முறை அறிமுகம் செய்யப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.ஐ.எம் அதாவுல்லா கூறினார்.

இந்த புதிய தேர்தல் முறையின்படி 30 சதவீதமான அங்கத்தவர்கள் விகிதாசார முறையிலும் 70 சதவீதமானோர் அவரவர் பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.

தனது கட்சி பிரேரித்த திருத்தங்கள் பின்னர் சேர்க்கப்படும் என்ற விளக்கத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமும் இதேபோன்ற கருத்தையே கூறினார்.

புதிய சட்டத்தின்படி மன்றத்தின் வரவு - செலவுத் திட்டம் இரண்டு தடைவ தோற்கடிக்கப்படுமாயின் உள்ளூராட்சிமன்றின் தலைவர் பதவி விலகவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இந்த புதிய சட்டத்தின் கீழ் நடைபெறும் முதலாவது தேர்தல்களாக இருக்கும் என அமைச்சர் அதாவுல்லா கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X