2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையக மக்கள் முன்னணிக்கு நீதிமன்றம் பணிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாருக் தாஜுதீன்)

மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனையை சமர்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று முன்னணிக்கு பணித்துள்ளது. 
 
நுவரெலியா மாவட்ட பிரதேசசபை அங்கத்தவர் கதிரவேலு கல்யாணகுமாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிரான ஆட்சேபத்தையே நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரையும் செயலாளரையும் பணித்துள்ளது.

எதேச்சதிகாரமான முறையில் தன்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக மனுதாரர், கட்சியின் தலைவர், செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதத்தைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி அமல் ரணராஜா, மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன், செயலாளர் ஏ.லோறன்ஸ் ஆகியோருக்கு மேற்கண்டவாறு பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .