2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எதிர்த்தே வாக்களிப்போம்: ஐ.தே.க.

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை எதிர்த்தே வாக்களிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும்  2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை எனவும் இதனால் இந்த வரவு -  செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்ததாக  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார கஷ்டங்களினால் துன்பப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை  இந்த வரவு – செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்த வரவு – செலவுத்திட்டத்திற்கு எங்களினால் ஆதரவளிக்க முடியாது.

2005ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை  சமர்ப்பிக்கின்றபோதிலும், அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 2007ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்திற்கு மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாக வாக்களித்தது.

வரவு – செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்; நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வரவு – செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடையும்வரை  கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் விவாதத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்சி தலைமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .