2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சீனாவில் கோட்டாபய

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதாக இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது. இருநாட்டு இராணுவ உறவினை உறுதி செய்து, ஒத்துழைப்பை அதிகரித்து நற்புறவை பேணவுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறன.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கௌங்லிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட உயர்மட்ட குழுகக்ளுக்குமிடையில் பீஜிங்கில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எட்டப்பட்டன.

சீனாவில் நடைபெறுகின்ற ஒன்பதாவது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ, சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். இக்கண்காட்சியானது சீனாவின் தெற்கு நகரமான ஷுஹையில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஏராளமான நவீன போர்த் தளபாடங்கள் மற்றும் புதியரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .