2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரிதி கொலைக்கு இலங்கையே பொறுப்பு: மகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி (வயது 49) படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கொல்லப்பட்டவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் திறன்வாய்ந்தவர்களே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள பரிதியின் மகள், இந்த படுகொலைக்கு இலங்கை முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புரிதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேற்படி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பெரிஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி...

பரிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பரிதி சுட்டுக்கொலை

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiiraz Wednesday, 14 November 2012 12:37 PM

    பிரான்ஸின் பாதுகாப்பு குறைபாட்டை குதறி எடுப்பதை விட்டுவிட்டு எந்த அடிப்படையும் இல்லாது ஸ்ரீலங்கா மேல் குற்றம் சொல்லுவது முட்டாள் தனம். தன் வினை தன்னை சுடும் வினை விதைத்தோர் அறுவடைசெய்யும் காலம் தேசம் கடந்து தொடங்கி உள்ளது. இனி எங்கு புலிகூட்டம் கொலைசெய்யபட்டாலும் ஆதாரமே இல்லாமல் ஸ்ரீலங்காமேல் குற்றம் சாட்டுவதன்றி இந்த புலிகூட்டதிட்கு வேறு காப்பீடு இல்லை???

    Reply : 0       0

    Sumathy m Wednesday, 14 November 2012 01:16 PM

    பரிதியின் கொலையின் வலியை அவரது உறவினர்களால் தான் உணரமுடியும். இன்று பரிதியின் மகளுக்கு அப்பா இல்லை, மனைவிக்கு கணவன் இல்லை. விசாரணைகள் நடைபெறும் வேளையில் அவசரப்பட்டு முடிவுக்கு வருவதென்பது உண்மையான கொலையாளியை தப்ப வைத்துவிடும். எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது என்பார்கள்.

    தமிழ் அரசியலில், தமது அரசியல் எதிரிகளிற்கு இயற்கை மரணம் இல்லை என்று மேடைகளில் முழங்கி வன்செயல் கலாசாரத்திற்கு வித்திட்டு எமது இனத்தை இந்த அவல நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் எமது தமிழ் தலைவர்கள். கொலை கலாசாரத்தை அறவே வெறுப்போம்.

    Reply : 0       0

    AJ Wednesday, 14 November 2012 01:50 PM

    ஒரு மனிதனின் இறப்பை பார்த்து சந்தோசப்படும் ஒருவர் உண்டு என்றால் உலகில் அது நீங்களாகத்தான் இருக்கும். சிலரது மொக்கு தனத்துக்கு அளவே இல்லை. பிரான்ஸ் பத்திரிகை, சர்வதேச பத்திரிகை மற்றும் இணையத்தையும் பாருங்கள் முஹமது. பருதி கொலையில் சமந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்களின் தகவல்படி இலங்கை அரசே இதை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது....

    Reply : 0       0

    AJ Wednesday, 14 November 2012 01:50 PM

    முன்னர் இங்கு மட்டும் இப்போது உலகு எங்கும். இது தான் இவர்களின் நிலை. காரணம் முன்னரும் அவரை கொலை செய்ய திட்டம் நடந்தது. ஆம் வினை விதைத்தவன் வினை அறுப்பான். அன்று சிங்கள பேரினவாதம் விதைத்ததுக்கு அனுபவித்தார்கள். இன்றும் அவர்களின் செயல்களுக்கு எதிர்காலத்தில் அறுவடை செய்வார்கள். அதேபோல உங்களை போல சில கோமாளிகளும் உண்டு. சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகம் அறியாது, நீங்கள் விதைப்பதுக்கும் அறுவடை உண்டு.

    Reply : 0       0

    Rizwan Wednesday, 14 November 2012 02:56 PM

    இவர்கள் செய்த அநியாயதுக்கு இதுவெல்லாம் சின்ன விசயம்... கொன்ச நென்சமாவா சென்சான்க...

    Reply : 0       0

    uvais Wednesday, 14 November 2012 03:32 PM

    இலங்கையை குற்றம் சாட்டும் இவர் அங்கு உள்ளவர்கள் யாரையாவது சொன்னால் இதே நிலைமை தான் நடக்கும். புலிகளின் முதல் இன்னிங்ஸ் இலங்கையில் ஆடி அளித்து விட்டார்கள். அடுத்த இன்னிங்ஸ் வெளிநாடுகளில் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி விக்கெட்டுகள் விழுவதை அழகாக பார்க்கலாம்...

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 15 November 2012 08:28 AM

    #AJ... ஸ்ரீலங்காவில் இலட்சகணக்கான உள்ளங்கள் இவரைப்போல் உலகமெங்கும் இருக்கும் புலிகூட்டம் அழியவேண்டும் ஒழிய வேண்டும் என்று பிராத்திதுகொண்டுதான் இருக்கின்றனர். அது உங்கள் காதுக்கு எட்டாததிற்காக இவரைப்போல் உள்ளவர்களின் அழிவு குறித்து ஸ்ரீலங்கா தேசத்து மக்கள் வருந்துகின்றனர் என்று சொல்லுவது படுமுட்டாள்தனம் கோமாளிகூத்துமாகும்.

    Reply : 0       0

    xlntgson Friday, 16 November 2012 02:02 AM

    ''FRANCE PAADHUKAAPPU KODUKKAT THAVARI VITTADHU''

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .