2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தெரிவுக் குழுவை தடுக்கவும்: மனு மீது இன்று விசாரணை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவை தடுக்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கத் தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதற்காக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவை நேற்று திங்கட்கிழமை நியமித்தது.

ஒழுக்கமின்மை, திறமையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றப்பிரேணையை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விசாரணையை தடுக்குமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையிலேயே இந்த மனுவை விசாரிப்பதற்காக எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, பி.டபிள்யூ.டி.சி ஜயதிலக மற்றும் அனில் குணவர்த்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நியமித்தது.

இந்த மனுவில் பிரதம நிதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .