2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெசோ தீர்மானங்களுக்கு ஐ.நா.வில் ஆதரவு திரட்டுவோம்: கருணாநிதி

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பவேண்டுமென அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்துவது என டெசோ ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே  இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கோவை ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஐ.நா, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவர்களை சந்தித்து டெசோ தீர்மானங்களுக்கு ஆதரவு திரட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலோசனைக்கூட்டத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்கள் இலங்கைப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஏதேனும் கொண்டுவரப்படுமா என கருணாநிதியிடம் வினவினர். இதற்கு அவர் பதிலளிக்காத நிலையில் அருகிலிருந்த  தி.மு.கவின் நாடாளுமன்ற அணித் தலைவர் டி.ஆர் பாலு, அப்படியானதொரு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .