2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முஸ்தீபு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பிரதம நீதியரசர் மீதும் ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதும் சேறு பூசிய இரண்டு ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இலங்கை சட்டவுரைஞர் சங்கம் ஆலோசனை நடத்திவருகின்றது.

அவதூறு கூறும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிய அரசாங்க ஊடக நிறுவனங்களில் இரண்டு ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இலங்கை சட்டவுரைஞர் சங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்தக்குழு தனது கடமையை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தக் குழு தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் இந்த அரசாங்க ஊடகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை பற்றிய தனது பரிந்துரைகளை செய்யும் எனவும் சங்கத்தின் செயலாளர் சஞ்சய கமகே தெரிவித்தார்.

பிரதம நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை விமர்சித்தமை, மன்னார் நீதவான் எ.யூட்ஸன் அவரது குடும்பங்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பியமை உள்ளிட்ட வியங்கள் தொடர்பிலேயே இந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் அந்த நிறுவனங்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஆராய்ந்து வருவதாகவும் சட்டவுரைஞர் சங்கம் கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .