2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிவப்பு மழையை ஆராய நிபுணர்குழு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பாகங்களிலும் பெய்த சிவப்பு மழை தொடர்பில் ஆராய்ச்சி செய்து அறிக்கையிடுவதற்கு  நிபுணத்துவ வைத்தியர்கள் குழு ஒன்றை  சுகாதார அமைச்சு  நியமித்துள்ளது.

இந்த குழுவில் நிபுணத்துவ வைத்தியர்கள் அறுவர் அடங்குகின்றனர் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

செவனகல, பதியதலாவ, ஹிங்குராங்கொட, மனாங்கொட  பகுதிகளில் அண்மையில் பெய்த சிவப்பு மழை தொடர்பில் ஆராய்ச்சிகளை  மேற்கொள்வதற்கே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர், வைத்தியர் அனில் சமரநாயக்கவின்  ஆலோசனைக்கு அமைவாகவே இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக கூறினார்.

நுண்ணுயிர், தண்ணீர், பக்ரீறியா ஆகியவற்றில் ஏற்கெனவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடிப்படை அறிக்கைகளின் பிரகாரம் இந்த சிவப்பு மழை பிரதேசவாசிகளுக்கு எந்தவித தீங்கையும் விளைவிக்கவில்லை. இருப்பினும் இந்த சிவப்பு மழை தொடர்பில் சுகாதார அமைச்சு ஆராய்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .