2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சர்மிளாவின் கருத்துக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

விபச்சாரத்தை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என  ஸர்மிளா ஸெய்யித் பி.பி.சி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய கருத்துக்கு இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் இயக்கங்கள் கண்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலம் சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கருத்தை வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், நாடு, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் கூறியுள்ளமை தெரிகிறது. விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட தரித்திரியமே மிகவும் அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளை காணலாம்.

இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மன நோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

தனது தாய்நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். இந்த கருத்தை குறித்த பெண் வாபஸ் பெற வேண்டும் அல்லது அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் சிப்லி பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஸர்மிளா ஸெய்யித் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்தினை பகிரங்கமாக வெளியிட்டு இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளார். இவரின் கருத்துக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். ஸர்மிளாவின் கருத்தானது முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்தியுள்ளது.

இந்த கருத்து தொடர்பில் ஸர்மிளா பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இஸ்லாம் மிகவும் தெளிவான மாக்கம் இதில் விபச்சாரம் என்றாலே ஹறாம் என்பதாகும். இதை சட்டமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு இஸ்லாமிய பெண் கருத்து கூறுவதானது இஸ்லாத்தை இழிவு படுத்துவதாகவே அமையும்" என்றார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள சர்மிளாவின் கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக சர்மிளா கூறியிருப்பதானது ஒரு பெண் மனிதநேய செயற்பாட்டாளர் என்ற வகையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை ஒழிப்பதற்கு பொதுநிறுவனங்களும் அரசாங்கமும் பாடுபட்டுவரும் நிலையில் இந்த விடயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என சர்மிளா கூறியிருப்பதானது சமூகச் சீரழிவை அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகவே மாறிவிடும் அபாயமுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை போன்ற நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. ஏனெனில் பாலியல் தொழிலுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் சென்றவர்களும் தவறாக பயன்படுத்தப்பட்ட பெண்களும் அல்லது அதில் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுமே  ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அதிலிருந்து மீட்டெடுக்க பெண்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாடுபட்டுவரும் நிலையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் ஆலோசனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதேபோன்று இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்மிளாவின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தின் கலாசார பாரம்பரியம் என்பது ஒழுக்க விழுமியங்களை சார்ந்துள்ளது. சர்மிளாவின் இந்த கருத்தானது ஒழுக்க விழுமியத்துக்கு மாசு கற்பிக்கும் கருத்தாகும். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்ற ஆலோசனையை எந்தவொரு மனிதநேய பெண் செயற்பாட்டாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தில் இருந்துகொண்டு இஸ்லாமிய நெறிமுறைகளை மீறி  சர்மிளா இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதை கண்டிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான ஒரு ஆலோசனைக்கு எதிராக பெண் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் சார்பான அரசசார்பற்ற நிறுவனங்கள் குரல் கொடுப்பதுடன் இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளியிட வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"விபச்சாரத்தை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டும் என ஏறாவூரை சேர்ந்த ஸர்மிளா ஸெய்யித் தெரிவித்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம். விபச்சாரம் ஹராமானது என்று குர்ஆனும் ஹதீஸும் தெளிவாக கூறியிருக்கும் போது ஒரு முஸ்லிம் பெண்ணான இவர் அதை சட்டபூர்வமாக்க வேண்டுமென கூறியதன் மூலம் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளார்.

இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட ஒன்றை ஹலாலாக்குவது இறை நிராகரிப்பை (குப்ரை) ஏற்படுத்தவதாகும். எனவே அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதோடு தான் கூறிய கரு;து பிழையானது என்பதை மனதார ஏற்று இறைவனிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவரது கூற்று முஸ்லிம்களின் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தை பற்றி தான் நினைத்ததை எல்லாம் கருத்து தெரிவிப்பதை இவர் கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்".

இது தொடர்பாக கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில்,

இஸ்லாத்திற்கு கெதிரான கருத்தை சர்வதேச வானொலி சேவக்கு தெரிவித்துள்ள சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா சையத் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி (இம்யா) உலமா சபைக்கு  அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

இது குறித்து கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி (இம்யா) உலமா சபைக்கு அனுப்பி வைத்துள்ள அவரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடிவதோடு, பல்வேறு நன்மைகள் ஏற்படுமென சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகார் சர்மிளா சையத் பி.பி.சி தமிழோசைக்கு கருத்துத் nதிவித்துள்ளார்.

சர்மிளா சையத்தின் கருத்து இலங்கையின் பராம்பரிய கலாசாரத்தின் கட்டுக்கோப்பை உடைத்தெறிவதாக அமைந்துள்ளது. அரசாங்கத்திற்கு பாலியல் தொழில் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான எவ்வித தேவையும் கிடையாது.

பெண்ணிலை வாதம் என கூறி நினைத்ததையெல்லாம் தெரிவிக்க முடியாது. இலங்கை அரச சாசனத்தின் 14வது சரத்தின்படி நாட்டுக் குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. ஆனால் அக்கருத்துச் சுதந்திரம் ஒரு தனி நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

பாலியல் தொழிலை இலங்கையில் எந்தவொரு சமூகமும் அங்கீகரிக்க போவதில்லை. அல்குர்ஆனும் ஹதீஸும் விபச்சாரத்தை முற்றாகத் தடுத்துள்ள நிலையில் ஒரு முஸ்லிமாகவிருந்துகொண்டு இத்தகைய கருத்தை சர்வதேச வானொலி சேவைக்கு வழங்கியுள்னமை அனைத்து முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாமியப் போதனைக்கும் அவப்பெயih ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விபச்சாரத்தை தொழிலாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுப்பது கடும் கண்டனத்திற்குரியதுனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உரிய விசாரணை நடாத்த வேண்டுமெனவும் இம்யா அனுப்பி வைத்துள்ள கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Rishab Wednesday, 21 November 2012 07:57 AM

    சர்மிளாவின் கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுடன் அவர் தான் சொன்ன கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்

    Reply : 0       0

    SH. Uwaisulkarni Wednesday, 21 November 2012 09:18 AM

    இவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது

    Reply : 0       1

    Ansar Wednesday, 21 November 2012 09:44 AM

    கணவர் எயிட்ஸ் நோயுடன் வீடு வரும்போது நிலமை புரியும்.

    Reply : 0       0

    AZHAHIM MHM Wednesday, 21 November 2012 09:55 AM

    "சிறகு முளைத்த பெண்" என்றால் சட்டபூர்வமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் என்றா இவரது அர்த்தம்???

    Reply : 0       0

    Jeya Wednesday, 21 November 2012 10:41 AM

    அவரது கருத்தை சமயத்துடன் தொடர்பு படுத்தி கருத்து சொல்ல வந்த‌ விடயத்தை சிந்திக் வேண்டும்.

    Reply : 0       0

    Jeya Wednesday, 21 November 2012 10:52 AM

    Don’t think within the arrow circle.

    Reply : 0       0

    Hasan Wednesday, 21 November 2012 10:59 AM

    இவருக்கு சரியான பத்துவா கொடுக்கவேண்டும். பின்பு ஒரு மேற்கு நாடு அவருக்கு புகலிடம் கொடுக்கும், அதுதான் அவரpன் குறிக்கொள்.

    Reply : 0       0

    ab.rahmaan Wednesday, 21 November 2012 11:33 AM

    ஒரு பொண்ணு மாட்டிக்கிட்டா இனி என்ன. வெலுத்து வாங்குறது தான். இந்த அறிக்கைக்கு மட்டும் குறை வேண்டாம்.

    Reply : 0       0

    ikmsm Wednesday, 21 November 2012 01:36 PM

    "உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்."
    ஆதாரம் : முஸ்லிம், அபு தாவுத் (1140, 4340)

    ஆக சர்மிளா தீமையை தடுக்கவில்லை மாறாக தீமைக்கு கைகொடுத்துள்ளார். தான் நாலெழுத்து படித்துள்ளேன் என்பதற்காக தான்தோன்றித்தனமாக கதைக்கிறார். இவர்களுக்கு ஒரு வசனம் சொல்லுவாங்க.. அதுதான் படித்த முட்டாள்கள் என்று.

    Reply : 0       0

    rima Wednesday, 21 November 2012 03:34 PM

    இந்த கருத்துக்கு 173 கஷை அடி கொடுக்க வேண்டும். அப்பதான் அடுத்தவர்கள் திருந்துவார்கள். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலாமா சபை நிறுத்த வேண்டும்.

    Reply : 0       0

    abdul Wednesday, 21 November 2012 03:47 PM

    இவர் முஸ்லிம் பெயருடன் இருப்பதால் தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.

    Reply : 0       0

    Abdul Rahuman Wednesday, 21 November 2012 04:37 PM

    You are allowed to express your own comments but you should know that you don’t have the right to propose such a humiliating issue being a Muslim and calling yourself as a Social Worker> if you like it do it for yourself but please do not disgrace our Holy Religion

    Reply : 0       0

    Raaj Wednesday, 21 November 2012 06:24 PM

    மௌலவி, நீங்கதான் சிறப்பு பிரதி எடுத்திங்கலாமே உண்மையா? அப்படின்னா ஏன் இப்படி ஒரு அறிக்கை?

    Reply : 0       0

    mufeeiz Wednesday, 21 November 2012 06:37 PM

    thanethu suyenalethukake markethei vitkinraச. mendum kalimasolli islathukul ware wendum

    Reply : 0       0

    xlntgson Sunday, 25 November 2012 09:33 AM

    I didn't get reply from anyone: 'Why Saudi Arabia allows it to westerners?'

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .