2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாலியல் தொழிலை நான் பிரசாரம் செய்யவில்லை: சர்மிளா விளக்கம்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் எனது கவலையினை தெரிவித்து கொள்கின்றேன்.

விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பில் இஸ்லாமிய பெண் என்ற வகையில் எந்தவித மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.

சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்திருந்தேனே தவிர சட்டமாக்க வேண்டும் என குறிப்பிட்டவில்லை. நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது.

பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது. அது சட்டபூர்வமாக்கப்படும் போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் பெறவும் பாதுகாப்பு பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதையும் வன்மையாககக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளை நோகடிப்பதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன்" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Nawfad Wednesday, 21 November 2012 03:05 PM

    சர்மிளா செய்யத் பேட்டியை கேளுங்கள். என்னமா விபசாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். பின்னர் ஏன் உடன் பல்டி அடிக்கின்றார்...............பதவி எதையும் பேச வைக்குமோ?.... சொல்லவே இல்ல......................

    Reply : 0       0

    xlntgson Friday, 23 November 2012 03:43 PM

    What is prostitution? The euphemism is sex for money! Is it a commodity? If there are more sellers less buyers what would happen? Islam severely punishes adultery but in other cultures it is not so. It is easy to find out the parentage if marriage is before romance, so, fornication is prostitution in Islam, marriage after pregnancy or child birth in the West is the norm, they ban arranged marriages. Marrying matured but below 18 is crime, not virginity auction! Sex swing,swap, orgy etc.

    Reply : 0       0

    xlntgson Friday, 23 November 2012 03:38 AM

    Media is for hot news, so, they would have given importance to tourists part of her, at the sametime Saudi rules permit it and the same people condemn Muslims for association with non-muslims. Media is not for Muslims only. No one comments on the plight of 90 percent Muslims living in secular countries. Western media edits to their benefit. I too wrote prostitution can be licensed for 40+ because I know prostitution cannot be regulated. It is sarcastic! The definition too changes culture to culture. Polygamy is not prostitution for a Muslim but polyandry, whereas in othes polyandry is practised, though not seen openly! So with incest! She apologized too for misrepresentation. I understand the difficulty of comprehension!

    Reply : 0       0

    nawas Thursday, 22 November 2012 02:35 PM

    சர்மிளாவின் கருத்து, அவர் ஒரு சமூக ஆர்வலர் என்ற நிலைப்பாட்டில் வரவேற்கத்தக்கது, இஸ்லாத்தில் விபசாரம் தடைசெய்யப்பட்டுள்ளது.
    ஆனால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்ற கருத்து வரவேர்க்கப்பட வேண்டியது. அத்துடன் வருமுன் காப்பதும் அவசியமாக உள்ளது.
    டூ நாட் போர்கேட் ப்ளீஸ் :( prevention is better than the cure)

    Reply : 0       0

    Reshan Thursday, 22 November 2012 06:40 AM

    கசை அடி போட இது காட்டுமிராண்டிச் சட்டங்கள் கொண்ட சவூதி அரேபியா இல்லை நண்பரே.

    Reply : 0       0

    Jr Thursday, 22 November 2012 04:39 AM

    சில சமூகவியல் படித்தவர்கள் மேற்கத்தய கலாசார பிரசாரகர்களாக மாறி விடுகின்றனர். வெளிநாட்டு மோகம் அவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது. மேற்கத்திய அடயாளமா? இஸ்லாமிய அடயாளமா? ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள். நீஙகள் பிரபலமாக சமூகத்தை விற்க வேண்டாம். பிளீஸ்.....தனியாளாக வேறு அடயாளத்துடன் ஈடு பட்டாலும் நோ ப்ரப்ளம். எங்கள் அடயாளத்தை விட்டு விடுங்கள்.

    Reply : 0       0

    hameed Thursday, 22 November 2012 03:03 AM

    கவிதை எழுதுவதால் எல்லாம் அறிந்தவர் என்று சொல்லமுடியது. அவருக்கு இஸ்லாம் தெரிந்து இருக்க முடியாது. எனவே இஸ்லாம் பட்றிய போதனை செய்ய வேண்டும்.

    Reply : 0       0

    Khan Wednesday, 21 November 2012 10:19 PM

    What a courageous! speaking social truth!

    Reply : 0       0

    mofaruk Wednesday, 21 November 2012 09:01 PM

    ஒரு வித்தியாசமான கருத்து :
    http://www.youtube.com/watch?v=OBSZfeStA44&feature=youtu.be

    Reply : 0       0

    Nawfal Wednesday, 21 November 2012 07:38 PM

    அவரது பிந்திய பேட்டி முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றது.பிரபல்யமாக வேண்டும் என் எண்ணினாரோ தெரியவில்லை. கடந்த கால வரலாறுகளை மறந்து விட்டார் போலும்.

    Reply : 0       0

    Habeeb Wednesday, 21 November 2012 07:20 PM

    சமூக உண்மையை மறைக்க முடியாது?

    Reply : 0       0

    Raaj Wednesday, 21 November 2012 06:18 PM

    சரியா சொன்னிக ஷர்மி.

    Reply : 0       0

    Kanavaan Wednesday, 21 November 2012 05:56 PM

    தவளையும் தன் வாயால் கெடும். பிபிசிக்கு பேட்டி கொடுக்கப் போய் கதைக்கத் தெரியாமல் கதைத்து மாட்டிக்கிட்டாங்க...

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 21 November 2012 03:41 PM

    எந்த ஒரு முஸ்லிமும் விபச்சாரம் செய்யவும் மாட்டான் விபச்சாரம் செய்பவன் முஸ்லிமாக இருக்கவும் மாட்டான்!!! முஸ்லிம் என்பது தமிழன் சிங்களவன் போல் பிறப்பால் மொழியால் மதத்தால் கலாசாரத்தால் உள்ள அடையாளம் அல்ல அது ஒரு கொள்கையை ஏற்று வாழும் மனிதர்களுக்கான அடையாளம். பரம்பரை முஸ்லிம்களின் குடும்பத்தில் பிறந்தவனும் அந்த கொள்கையை உதரிதள்ளி வாழ முட்பட்டால் அவனை உங்களை போன்ற முட்டாள்கள்தான் விளங்காமல் முஸ்லிம் என்று நோக்குவர் அவன் இழி செயல்களை முஸ்லிம்கள் செய்வதாக சாடுவர் முஸ்லிம்களை பொறுத்தவரை அப்படிபட்டோர் தீண்ட தகாத மனிதர்களை விட கேவளமானோறே

    Reply : 0       0

    rima Wednesday, 21 November 2012 03:22 PM

    முஸ்லிம் பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    abdul Wednesday, 21 November 2012 03:21 PM

    மொஹமெட் அமீரீன் கருத்து முற்றிலும் சரி. இந்த பொண்ணு என்ன முஸ்லிமா?

    Reply : 0       0

    Mannan Wednesday, 21 November 2012 09:19 AM

    நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது....
    நல்ல இஸ்லாமிய சமூகப் பெண்

    Reply : 0       0

    Ullam Wednesday, 21 November 2012 02:50 PM

    ஆஹா என்ன கருத்து என்ன அருமையான கருத்து.... உங்களை போன்றோரின் பக்கபலம் அப்பெண்ணிற்கு தேவை.... இப்படியான கருத்துக்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம் உங்களுடைய பக்கபலத்துடன்.... நீக்கள் ஒரு முஸ்லிம் அல்லாதவராயின் எனக்கு இரட்டிப்பு சந்தோசம்.....

    Reply : 0       0

    ashrakai Wednesday, 21 November 2012 02:48 PM

    இந்த சொல்லைச் சொன்னதற்கு கசையடி அடிக்க வேண்டும்,

    Reply : 0       0

    Reshan Wednesday, 21 November 2012 12:48 PM

    இங்கு பலரும் மதம் என்ற போர்வையினுள் ஒளிந்துகொண்டு அந்தப்பெண்மணியைப் படுத்துகின்றனர். இஸ்லாத்தில் வீட்டில் படம் மாட்டுவதையோ சினிமா பார்ப்பதையோ கூடத்தான் தடுக்கின்றது அவற்றை இங்கே மறுமொழி இட்டுள்ள எத்தனைபேர் பின்பற்றுகின்றனர்?? விபச்சாரம் இலங்கையில் சட்டமானால் இங்கே முண்டியடித்துக்கொண்டு கலாசாரம் காப்பவர்கள் என்று இங்கே தங்களை அறிமுகப்படுத்தும் ஆண்கள் பலர் முக்காடு போட்டுக்கொண்டு முதல் வரிசையில் நிற்பர் என்பதே நிதர்சனம்.

    Reply : 0       0

    Mohamed Ameer Wednesday, 21 November 2012 12:24 PM

    No comments beyond this: Read this Including Sharmila Sister

    “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமாக வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார். (33:36)

    உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.
    ஆதாரம் : முஸ்லிம், அபு தாவுத் (1140, 4340),

    Reply : 0       0

    shuaibib Wednesday, 21 November 2012 11:54 AM

    விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். இந்த கருத்தை குறித்த பெண் வாபஸ் பெற வேண்டும் அல்லது அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்"

    Reply : 0       0

    Mohammed Hiiraz Wednesday, 21 November 2012 11:46 AM

    சர்மிளாவுக்கு ஏனையோறுக்கு தெரியாத உண்மை தெரிந்து இருக்கிறது. அதாவது நாட்டில் பல பாகங்களிலும் சட்டவிரோதமான விபசாரம் நடக்கும் இடங்கள் நடத்தும் நபர்கள் இடைத்தரகர்கள் என நிறைய விடயங்களை அறிந்து வைத்திருக்கிறார். ஆக நாட்டின் சட்டபடி குற்றமான சமூக விரோத செயட்பாடு குறித்து அறிந்து அவைத்திருக்கும் இவர் அதனை புள்ளி விபரங்களுடன் பொலிஸாருக்கு முறையாக முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கையும் புனர்வாழ்வும் பாதிக்கபட்டோருக்கு எதிராகவும் பாதிப்புகுள்ளாகினோருக்கு எதிராகவும் செயல்படுத்தபட உதவி செய்ய வேண்டும். அதுதான் இந்த நாட்டை மதிக்கும் நாட்டு பிரஜையின் கடமை குற்றங்களை ஏனையோரைவிட தெளிவான புள்ளி விபரங்களுடன் அறிந்து இருந்தும் அதனை தடுக்காது அதனை மூடி மறைத்து குற்றம் தொடர வழி வகுப்பது கிரிமினல் குற்றமாக கருதி வழக்கு தொடர வழி வகுக்க கூடும்.

    Reply : 0       0

    shuaib Wednesday, 21 November 2012 11:36 AM

    தனது தாய்நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

    Reply : 0       0

    shuaib Wednesday, 21 November 2012 11:28 AM

    இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மன நோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

    Reply : 0       0

    Hasan Wednesday, 21 November 2012 11:02 AM

    Yes, you will get a good country to seek asylum soon

    Reply : 0       0

    Jeya Wednesday, 21 November 2012 10:49 AM

    I wish your truthful comment.

    Reply : 0       0

    Mohamed Wednesday, 21 November 2012 10:37 AM

    விபச்சாரர்களுக்கு உரிய தண்டனையை இஸ்லாம் சொல்லி விட்டது. அதை செய்வதை விட்டு அவர்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் பற்றி கலிமா சொன்ன ஒரு நாவு பேசாது. வெட்கம், உங்கள் நியாயத்தை முஸ்லிமல்லாதவர்களுக்குதான் சொல்லாம்.

    Reply : 0       0

    Mannan Wednesday, 21 November 2012 09:53 AM

    hope sarmila gone mad. tourism will never come up cos of this.

    Reply : 0       0

    SZ Wednesday, 21 November 2012 09:52 AM

    I was listening to what you were saying on BBC. I was shocked to hear your opinion which hurts not only the Islamic idealism, but also the heritage of Sri Lanka. Please accept the mistake and ask pardon from Allah and people of Sri Lanka for your comments without deviating the topic. We can’t make things legal due to it occurrence, but need to make way to eliminate those disease from the society.

    Reply : 0       0

    AZHAHIM Wednesday, 21 November 2012 09:51 AM

    முதலில் அவரது செவ்வியை மீண்டுமொருமுறை கேட்டுப்பார்க்க சொல்லுங்கள். எதை கூறினார் என்று மறந்துவிட்டார் போலும்.
    சமூகத்தில் நடக்கின்ற தவறுகளை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதா? அல்லது சட்டபூர்வமாக்குமாறு வேண்டுவதா ?
    கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றையும் சட்டமாக்குமாறு இவர் கோரினாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
    "சிறகு முளைத்த பெண்" என்றால் சட்டபூர்வமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் என்றா இவரது அர்த்தம்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .