2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீதிமன்றம் 'அழைப்பாணை' விடுக்கவில்லை: சுமந்திரன்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் சபாநாயகருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கவில்லை. அறிவிப்பொன்றையே விடுத்துள்ளது என்று எதிரணி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.சுமந்திரன் ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

சட்டத்தரணியான பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

தெரிவுக்குழுவுக்கும் சபாநாயகருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கவில்லை. அறிவிப்பொன்றையே விடுத்துள்ளது. அதனையும் அவமதிக்காது செயற்படல் வேண்டும்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜோசம் மைக்கல் பெரேரா எம்.பி. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பை மதிக்காவிடின் தெரிவுக்குழு தொடர்பில் நீதிமன்றத்திற்கு ஒரு பக்கசார்பான தீர்ப்பை எடுக்கவேண்டிவரும்.

நாடாளுமன்றமும், சட்டவாக்கமும் இறையான்மைமிக்கதல்ல மக்களே இறையான்மை மிக்கவர்கள் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X