2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பரீட்சை மோசடிகளை தவிர்க்க புதிய சட்டம் அவசியம்: பந்துல

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

பரீட்சைகளின் போது இடம்பெறும் மோசடிகளைக் தடுப்பதற்காக புதிய சட்டமொன்று அவசியமாகின்றது என கல்வி அமைச்சர் பந்துல குணவரத்தன தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் பிரகாரம், பரீட்சை வினாத்தாள் மோசடியில் ஈடுபடுபவர்கள் பிணையில் செல்ல முடியாதளவுக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிக்கும் வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான வினாப்பத்திரங்கள் பரீட்சை நடைபெற்ற தினத்திற்கு முன்னதாகவே வெளியானமை விசாரணைகளிலிருந்து உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பரீட்சை திணைக்கள நிர்வாகம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த குற்றத்தை மேற்கொண்டவர்களும் மேற்படி புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் வகையில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்' என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

'நாம் ஏற்கனவே சட்டத்தை திருத்தியிருக்க வேண்டும். அப்படி திருத்தியிருந்தால், தேசிய பரீட்சைகளின் போது பல்வேறு மட்டங்களிலும் 34 ஆயிரம் பேர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்' என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

'வினாப் பத்திரங்களை பல்கலைக்கழக கல்வியாளர்களே தயாரிக்கின்றனர். அவற்றை இன்னொரு பிரிவினர் தட்டச்சு செய்கின்றனர். மற்றுமொரு பிரிவினர் அச்சடிக்கின்றனர். அச்சடிக்கப்பட்ட வினாப்பத்திரங்களை மற்றுமொரு பிரிவினர் பொதிசெய்து ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுவே, வினாப்பத்திங்கள் அனுப்பி வைக்கப்படும் முறையாகும்.

இந்நிலையில், இந்த விளாப்பத்திரங்கள் வெளியாவதற்கு வழியில்லை. இதையும் மீறியே இந்த வினாப்பத்திரங்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடுமையானளவில் சட்டத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியும்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .