2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சங்கக்காரவுக்கு சத்திரசிகிச்சை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குமார் சங்கக்கார விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது இடது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது.

இன்றையதினம் அவர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும்போது மிற்சல் ஜோன்சன் வீசிய பந்து அவரது இடது கையைத் தாக்கியது.  அவரது சுட்டு விரலில் அதிகளவிலான வீக்கம் காணப்பட்டதால் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில்  மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனைகளில் அவரது சுட்டு விரலில் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்  அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சத்திரசிகிச்சையின் காரணமாக அவரால் 6 வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற முடியாதென  அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியத் தொடர் முழுவதிலும் அவர் பங்குபெறமாட்டாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர, சானக வெலகெதர, விக்கெட் காப்பாளரான பிரசன்ன ஜெயவர்தன ஆகியோரும் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில் சானக வெலகெதர மூன்றாவது போட்டியில் பங்குபற்றமாட்டாரென   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .