2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவூதி பிரஜையை ஏமாற்றியவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜனவரி 02 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து 11 வீட்டு பணிப் பெண்களை பெற்று தருவதாக தெரிவித்து சவூதி பிரஜையொருவரை ஏமாற்றி 3.2 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு தொழிவாய்ப்பு முகவரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த லஹிரீன் சைபுதீனையே விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான சவூதி அரேபிய பிரஜை, தான் இலங்கை முகவரிடம் முழு பணத்தையும் செலுத்திவிட்ட போதும் அவர் பணிப்பெண்களை வழங்க தவறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் தனக்கு ஒரு காசோலையை வழங்கியதாகவும் அந்த காசோலைக்கான வங்கிக் கணக்கில் நிதியின்மையால்  அந்த காசோலையும் செல்லுபடியற்றதாகி விட்டது எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .