2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அராஜகத்துக்கு வழிசமைக்க வேண்டாம்: விஜித

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற தீர்ப்புக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பளித்து நடக்க தவறும் பட்சத்தில் நாட்டில் பாரியதொரு பிரச்சினை உருவெடுக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
 
'மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம், சட்டத்தை மதிக்கவில்லையாயின் நாட்டு மக்களும் சட்டத்தை மதிக்கப்போவதில்லை. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நாட்டின் ஒழுக்கம், சட்டம் எதுவும் இல்லாமல் போய்விடும். அராஜகம் தலைவிரித்தாடும். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே அவ்வாறான அராஜகங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'தற்போது அரசாங்கத்துக்கு உள்ள ஒரேயொரு வழி, குற்றப்பிரேரணையை மடித்து வைப்பதுவேயாகும். நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த அரசாங்கம் இதைச் செய்துதான் ஆக வேண்டும்' என்றும் விஜித்த ஹேரத் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X