2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீருடையணிந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிங்களம் கற்பிக்கவில்லை: பிரிகேடியர் ருவன்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ சீருடை அணிந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கறிபிக்கத் தொடங்கியுள்ளனர் எனும் குற்றச்சாட்டை இராணுவம் நேற்று மறுத்துள்ளது.

'கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்கக்கூடியவர்களை இனங்கண்டார்.

இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
இவர்கள் இப்போது கற்பித்தலுக்கு தயாராக உள்ளனர்.

ஆனால், எவரும் சீருடையில் கற்பிக்க மாட்டார்கள். இவர்கள் சிவில் உடையில் கற்பிக்க பணிக்கப்படுவர்' என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

'உரிய அதிகாரிகளின் வேண்டுதலின் அடிப்படையில் மட்டுமே இது நடைபெறும். ஆனால், இதுகூட உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடுதான்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

'நல்லெண்ணத்துடனான எமது செயற்பாட்டை சுயநல நோக்கமுள்ள சிலர் இராணுவம் இதை வற்புறுத்தி செய்வதாக சித்தரிக்கின்றனர். இது பிழையானது. அடிப்படையற்றது' என அவர் மேலும் கூறினார். (சுபுன் டயஸ்)

You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 05 January 2013 03:46 AM

    ஏன் இன்னும் குறுகிய எண்ணம் மொழிகளை கற்பதன் மூலம் கருத்து பரிமாற்றங்களை கட்சிதமாக செய்ய முடியும் தானே?

    Reply : 0       0

    AJ Saturday, 05 January 2013 11:57 AM

    மீனவன் அப்போது என்றால். முஸ்லிம் பாடசாலைகளில் இவர்களை அனுமதிக்கலாமே. உங்களுக்கு வந்தால் மட்டும் தான் வலி .. அதை விட இங்கு சிங்களம் படித்து கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நாங்கள் விரும்பினால் பிடிப்போம்.. அதும் முறைப்படி ஆசியர்களில் இருந்தால். இது எல்லாம் விட வித்தியமாக காட்டாட்சி நடந்தும் அரசு ராணுவத்தை பாடசாலைகளுக்கு அனுப்புகிறது. இதை கூட தவறு என்று ஏற்றுகொள்ளும் மனம் உங்களிடம் இல்லை. இதன் இலங்கை. இதே தெற்கிலும் ராணுவம் சிங்களம் படித்து கொடுக்கலாமே.. தமிழ் ஆசிரியர்கள் சிங்கள மாணவர்களுக்கு சிங்களம் படிதுகொடுக்கலமே. அதுக்கு மட்டும் ஏன் தடை முடியாது? திட்டமிட்ட அடக்கு முறை. இன, மொழி கலாச்சார அழிப்பு. எங்காவது உலகில் பாடசாலையில் ராணுவம் படித்து கொடுக்குத? வெட்கம். இதை கூட புரிந்துகொள்ள முடியாமல் தேவை அற்ற வியாக்கியானம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .