2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தி.மு.க விலகத்தயாரா வைகோ கேள்வி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலகத் தயாரா? என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து எதிர்வரும் 08 ஆம் திகதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டினை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில்  பங்கேற்பதற்காக ம.தி.மு.க.வின் சீருடை அணிந்த தொண்டர் அணியினர் 100 பேர் ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில் எழும்பூரிலிருந்து புறப்படும் சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி பயணத்தை தொடங்கினர்.

இந்த தொண்டர்களை பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் எழும்பூடர் ரயில் நிலையம் வந்து உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே  வைகோ மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிராக கருணாநிதியின் டெசோ போராட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது பதவியில் இருந்தவர்தானே கருணாநிதி. அப்போது தவறு செய்து விட்டோம், இப்போது உணர்ந்து எதிர்க்கிறோம் என்றால், இலங்கை ஜனாதிபதி  இந்தியாவில் நுழைவதை கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகத் தயாரா? முன்னாள் முதல்வர் இதை அறிவிக்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .