2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிபொருள் மானியம் வழங்காதுவிடின் வேலை நிறுத்தம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலிந்தி ஜயசுந்த

அரசாங்கம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பாக எரிபொருள் மானியம் வழங்காதுவிடின் நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தீர்மானிக்கும் கூட்டம் நேற்று காலையில் இடம்பெற்றுள்ளது.

பஸ்கட்டண உயர்வுக்குப் பதிலாக அரசாங்கம் தமக்கு எரிபொருள் மானியம் தருவதையே தாம் விரும்புவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'எதிர்வரும் 14 ஆம் திகதி பஸ்கட்டணங்ளை உயர்த்த அனுமதிப்பதாக அதிகாரம் வாய்ந்தவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், இப்போது அதைச் செய்ய மறுத்து தமது வாக்குறுதியை மீறியுள்ளனர். இப்போது அவர்கள் இந்த விடயத்தை பற்றிப் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். எமக்கு நிதிவடிவில் அல்லது எரிபொருள் வடிவில் உதவி வழங்குவது அவசியம். இதில் ஏதோவொன்றை அரசாங்கம் தர மறுக்குமாயின் முன்னறிவித்தலின்றி பஸ் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம்.

சேவையிலுள்ள 20,000 பஸ்களில் 16,000 பஸ்கள் தனியாருக்கு உரியவை. 4000 பஸ்களை மட்டும் சேவையிலீடுபடுத்த இலங்கை போக்வரத்து சபைக்கு தேசிய போக்குவரத்து ஆணையகமும் தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சும் 280 இலட்சம் ரூபா உதவியை வழங்கியுள்ளன.
ஆனால், எமக்கு உதவி கிடைப்பதில்லை. இது மாற்றாந்தாய் மனப்பாங்காகும்.

இலஞ்சத்தின் அடிப்படையில் சட்டத்தை மீறி பஸ் அனுமதிகள் வழங்கப்படுவதால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபா நட்டம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது' என அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .