2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழில். தினக்குரல் விநியோகஸ்தர் மீது தாக்குதல்; பத்திரிகைகள் தீக்கிரை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, கிரிசன், எஸ்.கே.பிரசாத்

யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் அவர் விநியோகிப்பதற்கான எடுத்துச்சென்ற பத்திரிகைகள் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
 
இந்த சம்பவம் யாழ். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அருகாமையில் இன்று காலை 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சிவகுமார் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பு கம்பிகளினாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவனில் இருந்து புத்தூர் பகுதியை நோக்கி பத்திரிகைகள் விநியோகித்து செல்லும் போது, இன்று அதிகாலை 4.15 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அருகாமையில் வழிமறித்து கம்பியால் தாக்கியதுடன், மோட்டார் சைக்கிள் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.

கம்பியால் தாக்கப்படட்டு படுகாயமடைந்த அவர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்து இராணுவத்தினரின் தொலைபேசி மூலம் தினக்குரல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், பின்னர் இராணுவத்தினர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தாக்குதலுக்கு இலக்கானவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து யாழ். தினக்குரல் பிரதம ஆசிரியர் விநாயகம்பிள்ளை அற்புதானந்தன் கருத்து தெரிவிக்கையில்,

'யாழ்.பத்திரிகைகளுக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் உதயன் பத்திரிகைக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது யாழ்.தினக்குரல், இனிவரும் காலங்களில் எந்தெந்த பத்திரிகைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ள உள்ளார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறான தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறே தெரிந்தாலும்கூட வெளியில் கூற முடியாத நிலை காணப்படுகின்றது.

ஜனநாயக நாட்டில் ஊடகங்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதானது நல்ல விடயம் அல்ல. 

யாழில் சுமூகமான நிலை காணப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இது துரதிஷ்டாமான நிலையாகும்' என  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 07 February 2013 06:55 AM

    ஆசியாவின் அதிசம் மிக்க இந்த ஊரில் ஒரு நாட்டின் கண்கள் ஊடகவியாளர்கள் மற்றும் ஊடகம். தினமும் அடி உதய் கொலை என்று தொடர்ந்து நடக்கிறது. இதுநாள் வரை 92 ஊடகவிலாளர்கள் கொலை, காணாமல் போன பிரகதி கெதி என்ன என்றே தெரியவில்லை. உயிரை பிடித்துகொண்டு சண்டே லீடர் எடிட்டர் பெற்றிக ஜோன்ஸ், மன்னாரில் மரண கடிதங்கள் எண்டு இன்னும் ஏராளம். உதயன் மீது சொல்ல முடியாத தாக்குதல். இது அனைத்தும் இவர்களின் அடக்குமுறை, தமிழ் இன அழிப்பு, செய்யும் அட்டுழியங்களை ஒரு பகுதி, இன்னும் ஏராளம் இருக்கிறது. ஊடகத்தை அடித்து அச்சுறுத்து செய்து தனக்கு சேவை செய்யவேண்டும் என்று நினைகிறார்கள். இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலை.

    Reply : 0       0

    அமலன் Thursday, 07 February 2013 08:46 AM

    ஒ இதுதான் வடக்கின் வசந்தமோ?

    Reply : 0       0

    meenavan Thursday, 07 February 2013 10:15 AM

    அரச அனுசரணை பயங்கரவாதம் ....பத்திரிகை சுதந்திரம் பாதுகாத்தலில் சிந்தனையின் வெளிப்பாடு.....ஆசியாவின் ஆச்சரியமான நமது நாடு.......???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .