2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் உரைக்கு கருணாநிதி கண்டனம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 65 ஆவது சுதந்திர தின வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

'இந்த பூனையும் பால் குடிக்குமா' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் தர முடியாது என்றும் நாட்டை இனரீதியாக பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தனது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுய உருவத்தையும் குணத்தையும் மத்திய அரசு இப்போதாவது புரிந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உறுதி மொழி அளித்திருந்தார். தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதை மீறியிருக்கிறார். இதற்காக உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இலட்சக்ணக்கான தமிழர்களை படுகொலை செய்தும் இலங்கையிலிருந்து அகதிகளாக புலம் பெயரச் செய்தும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகள், நிலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறித்து விட்டு நாட்டை சர்வாதிகாரப் பாதையில் செலுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.

கடந்த 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை செய்தது. ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பின்னரும் இதுவரை அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல், அதற்கு எதிரான காரியங்களை மட்டுமே தற்போது இலங்கை செய்து வருகிறது. இப்போதாவது மத்திய அரசு ஜனாதிபதி மஹிந்h ராஜபக்ஷவின் குணத்தை புரிந்துகொள்ள வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • அக்கையூர் முல்லா Thursday, 07 February 2013 06:08 AM

    இன உணர்வு பற்றி பேசுவதற்கு இம்மியளவும் தகுதி அற்றவர் கருணாநிதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X