2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சென்னை ஐ.நா அலுவலகம், இலங்கை தூதரகம் நாளை முற்றுகை: வைகோ

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்துமாறு வலியுறுத்தியும் இதன்போது தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை தவறியதைக் கண்டித்தும் சென்னையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்கள் மரணிக்கக் காரணமாகவிருந்த இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அறப்போர் நடைபெற உள்ளது. சுதந்திரத் தமிழர் விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பெப்ரவரி 12ஆம் திகதி லண்டன் மாநகரில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் தமிழர் விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர்.  இந்நிலையில், முருகதாசன் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில், அண்ணல் காந்தியார் சிலை அருகில், நினைவுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறிய ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Tuesday, 12 February 2013 05:34 AM

    உங்களுக்கு இதைத்தவிர தொங்குவதற்கு வேறு கயிறு இல்லையா..? உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு இந்தியாவிலேயே எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இலங்கையில் வாழும் தமிழர்கள் நடந்ததை, கடந்ததை மறந்து இனி எப்படி வாழ்வது என்று யோசிக்கும் இவ்வேளையில் இம்மக்களை உங்கள் சுயநல அரசியல் பசிக்கு இரையாக்காதீர்கள். இந்திய அரசு அப்போது எல்லா நிகழ்சியையும் பார்த்துக் கொண்டிருந்ததுதானே... அந்த அரசை கண்டிக்க வேண்டியதுதானே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .