2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'விவேகத்திற்கு சூரை மீனை உட்கொள்ளவும்'

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

'யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி  பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?

அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே  விவேகமுடையவர்களாக உள்ளனர்' என அவர் கூறினார்.

முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.

You May Also Like

  Comments - 0

  • Ravi Tuesday, 12 February 2013 12:58 PM

    ஏதாவது சூரை மீன் பிஸினஸ் தொடங்கியாச்சா?

    Reply : 0       0

    jegan Tuesday, 12 February 2013 01:48 PM

    சூப்பெர் சேர்.....நீங்களும் அப்பிடியே கொஞ்சம் சாப்பிடலாம் தானே......

    Reply : 0       0

    Kanavaan Tuesday, 12 February 2013 01:50 PM

    அதிகளவு சூரை மீனைச் சாப்பிட்டதாலா அல்லது அதன் கிரந்திக் குணத்தாலா வீரவன்சவிற்கு தற்போது வந்துள்ள இந்த அறிவு. இவரின் இக்கண்டுபிடிப்பிற்கு ஜனாதிபதி என்ன பரிசு வழங்கவுள்ளாரோ யாரறிவார்.

    Reply : 0       0

    Nafeel Tuesday, 12 February 2013 02:30 PM

    நீங்களும் முயற்சி செய்யுங்க.

    Reply : 0       0

    Avathanee Tuesday, 12 February 2013 04:27 PM

    சூரை மீன் உட்கொள்வதை விட்டு விட்டு கல்வி திட்டத்தை ஒழுங்கு படுத்தி ஊழலலையும் ஒழித்தால் நாடு முன்னேறி விடும்.. முதலில் இவருக்கு நிறைய‌ சூரை மீன் கொடுக்க வேண்டும்..

    Reply : 0       0

    hf Wednesday, 13 February 2013 03:54 AM

    நீங்க சாப்பிடுங்க முதல்ல

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .