2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசாங்க நாடகத்தில் வீரவன்ஸ நடிகர்: திஸ்ஸ

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லஹிறு பொத்முல்ல

ராஜபக்ஷ குடும்பத்தால் எழுதப்பட்ட ஒரு நாடகத்தில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நடித்துவருகின்றார். வீரவன்ஸ, அவர்களின்  முறைகேடான செயல்களை மூடி மறைக்கவும் முயல்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

'நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணகர்த்தாவுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றம் கூறாமல், திறைசேரிச் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மீது இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக வீரவன்ஸ குற்றம் சுமத்துகின்றார்.'

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் வரையில் பொருளாதார அபிவிருத்தியும் முதலீடும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அமைச்சின் பகுதியாக இருந்தன. மத்திய வங்கி கூறுவதற்கு மாறாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது முதலீட்டு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது அவர் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினர் பொருளாதாரத்தை முகாமை செய்வதில் தமது இயலாமையை மீண்டும் ஒருமுறை மூடி மறைக்க முயல்கின்றனர்' எனவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0

  • abusaara Tuesday, 19 February 2013 04:52 AM

    விமல் வீரவன்ச மட்டுமல்ல, அந்த நாடகத்தில், உங்கள் தலைவர் மற்றும் உங்களுக்கும் ஒரு பலத்த பங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாமலில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X