2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி:ஜனாதிபதி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுமாறு கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

நாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தும் வகையிலேயே சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சின் செயற்றிடங்களை ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிள்ளைகள் இருப்பதனால் தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதேபோல பிள்ளைகளும் ஆசிரியர்களுக்காகவே இருக்கின்றனர்.

ஆகையால், நல்ல கல்வியை இந்நாட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காக கல்வித்துறையில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .