2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை விமான நிலையம் உட்பட இந்தியாவின் ஏழு விமான நிலையங்களுக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதாக புலனாய்வுக் குழுமம் (ஐ.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அந்த விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏழு விமான நிலையங்களும் சிறிய வகை விமானங்களால் மோதித் தாக்கப்படவோ, விமானங்கள் கடத்தப்படவோ, புதியவகை வெடிகுண்டுகள் மூலமாகவோ தாக்கப்படக் கூடும் என்று புலனாய்வுக் குழுமம எச்சரித்துள்ளது.

புதுடில்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குவஹாத்தி ஆகிய 7 நகர விமான நிலையங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் அரசு புலனாய்வுக் குழுமம் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையொட்டி, 7 மாநில அரசுகளுக்கும் மத்திய புலனாய்வுக் குழுமம் தனது எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகக் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது 2001 ஆம் ஆண்டு ஜூலை 24  ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 விமானங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .