2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தயாசிறி இராஜினாமா;கல்லெறிவதாக குற்றச்சாட்டு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் ஆற்றிய விசேட உரையினை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இதன்போது தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சிக்குள் இருப்பவர்கள் தன் மீது கல்லெறிவதாகவும் இதனாலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாகவும் தனது விசேட கூற்றின்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை என்றும் எதேச்சதிகாரத்தினால் கட்சி சீரழிந்து வருவதாகவும் இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 10 வருடங்களாக ஆட்சியிலிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 40 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் அவர், ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்ப முடியாது என்பதனால் ஜனநாயகத்தை தேடி போகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அமைச்சு பதவியை என்னால் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை.
வடமேல் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே போட்டியிடுவேன். கடந்த தேர்தலின் போது ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்ற நான் இம்முறை தேர்தலில் எவ்வாறு வெற்றிபெறபோகின்றேன் என்பதனை எதிர்க்கட்சித்தலைவரினால் பார்த்துக்கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி கைகூடவில்லை, போராட்டம் பயனலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • john Wednesday, 24 July 2013 12:30 PM

    அடக் கடவுளே... நம்ப முடில...

    Reply : 0       0

    SLAHY-سلاهي Wednesday, 24 July 2013 01:14 PM

    ஒரு அன்பர் சொல்கிறார், UNP ஒரு தேவையில்லாத கட்சி, அதிலிருந்து என்ன பயன் என்று...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .