2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பூர் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தவும்: நீதிமன்றம் பணிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு பணித்துள்ளது.

2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த தம்மை தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்பூர்வாசிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மிகச்சிலரே இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் கூறிய அரச தரப்புச் சட்டத்தரணி, அவர்களையும் மீளக் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், அதனை நிராகரித்த மனுதாரர் தரப்புச் சட்டத்தரணி, சுமார் 200 குடும்பங்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் அதற்கான இடங்கள் அடையாளங்காணப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மக்களை குடியமர்த்துவதற்கான இடங்களை அவர்களுக்கு அடையாளம் காட்ட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.(பிபிசி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .