2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டசபையில் தீர்மானம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 
 
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதை ஏற்று தமிழக சட்டசபையில் இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அத்தீர்மானத்தில், கொழும்பில் நவம்பர் 15ஆம் திகதி பொதுநலவாய மாநாடு நடைபெறுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ள கூடாது. சிங்களவருக்கு இணையாக தமிழர்களும் வாழ உரிய நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத நிலையில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. 
 
இத்தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். (தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .