2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கவனயீனம், உதாசீனத்தால் மரணம் நேரின் காரணமானவருக்கு எதிராக கடும் சட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

ஒருவரின் கவனயீனம் மற்றும் உதாசீனம் காரணமாக இன்னொருவர் மரணமடைய நேரிடுமாயின் மரணத்துக்கு காரணமானவருக்கு எதிரான சட்டங்கள் இனிமேல் கடுமையாக செயற்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக வழியிலிருந்த கல்லொன்றில் தடுக்கி வீழுந்த ஒருவர் மண்டை சிதறி உயிரிழப்பாராயின் அவர் தடுக்கி விழும் வகையில் கல்லை பாதையில் போட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

நிறுவனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறியுள்ள பொலிஸ் தலைமையகம், உதாரணமாக வீதி திருத்;த வேலையின்போது ஒரு கிடங்கு இருப்பதை தடுப்பு மூலம் காட்டத் தவறி, அதனுள் ஒரு குழந்தை விழுந்து இறக்குமாயின் அதற்கு பொறுப்பான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருமாறு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .