2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

துமிந்தவுக்கு எதிராக வழக்கா? இல்லையா? மே முடிவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட நீதவான் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மே மாதம் 2 ஆம் முடிவெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

மனிதகொலைகள் மற்றும் காயங்கள் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் 13 பேருக்கு எதிராகவும் சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X