2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குர்ஆன் அவமதிப்பு: பொது பல சேனாவிடம் விசாரிக்க பொலிஸ் முஸ்தீபு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்ததாக  கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரக்க விஜித்த தேரரினால் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகவே மேற்படி முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜன பல சேனாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ள பொது பல சேனா அமைப்பினர் அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்தனர் என்று கொம்பனித்தெரு, வொக்ஷல் வீதியைச் சேர்ந்த நூர்தீன் மொஹமட் தாஜுதீன் என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Wednesday, 16 April 2014 02:45 PM

    ஒரே இறைவனை வழிபடும் 100 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன் எத்தகைய புனிதம் என்பது உலக அறிஞர்களுக்கு தெரியும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .