2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்டரக்க தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாதிக பல சேனாவின் தலைவரும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜயத்த தேரருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

பொய்யான முறைப்பாட்டைச் செய்து பொலிஸாரை அலைக்கழித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வட்டரக்க தேரர், இன்று மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான், அவரது விளக்கமறியலை நீடித்தார்.

அத்துடன், அன்றைய தினத்தில், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறும் நீதவான் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .